புதுச்சேரி : ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வராத மாணவர்களுக்கு இழப்பு தான்’ என இமாகுலேட் பள்ளி மாணவிகள் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சியில் இமாகுலேட் பள்ளி மாணவிகள் கிருத்திகா, நர்மதா, ஹரிணி ஆகியோர் பங்கேற்றனர்.கல்வி நிறுவன அரங்குகளை பார்வையிட்டதுடன், மூன்று நாட்களிலும் நடந்த கருத்தரங்க அமர்வு களிலும் தவறாமல் பங்கேற்றனர்.ஒவ்வொரு அமர்விலும் கல்வியாளர்களை நேரில் அணுகி விளக்கம் பெற்றனர். பொது அறிவு போட்டியிலும் ஆர்வமாக பங்கேற்றனர்
மாணவி கிருத்திகா கூறுகையில், ‘எம்.பி.பி.எஸ்., படிக்க நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறேன்.வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்த பிறகு நீட் மதிப்பெண்ணை தாண்டி, எவ்வளவு படிப்புகள் உள்ளன என்று தெரிந்து கொள்ள முடிந்தது. தனித்துவமிக்க இப்படிப்பினை முடித்தவர்கள் லட்சணக்கில் சம்பளம் பெறுவதை கேட்டு வியப்படைந்தேன். மத்திய தேர்வாணைய போட்டி தேர்வுக்கு தயாராகும் விதம் குறித்து கல்வியாளர் அளித்த விளக்கங்கள் சூப்பர்’ என்றார்.
மாணவி நர்மதா கூறும்போது, ‘இன்ஜினியரிங் படிக்க உள்ளேன். ஆனால் வெறும் இன்ஜினியரிங் படிப்பு மட்டும் வாழ்க்கைக்கு உதவாது. பல துறை திறமைகள் வேண் டும் என ஆணித்தரமாக கல்வியாளர்கள் கூறினர்.குறிப்பாக உலகை ஆளப்போகும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு கள், விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மெண்டட் ரியாலிட்டி, இண்டர்நெட் ஆப் திங்க்ஸ், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், 3டி அச்சு தொழில்நுட்பம் குறித்து தெளிவாக விளக்கினர்.
அதனால் தொடர்ந்து வந்து புதிய தகவல்களை தெரிந்து கொண்டோம். வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வராவிட்டால் எங்களுக்கு தான் இழப்பு ஏற்பட்டு இருக்கும். வாரத மாணவர்களுக்கு கண்டிப்பாக இழப்பு தான்’ என்றார்.
Advertisement