சிவில் விமான சேவை அதிகாரசபைக்கு செல்லும் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சிவில் விமான சேவை அதிகாரசபைக்கு தொழிலாற்றும் பொறிமுறையொன்று நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை
மறுஅறிவித்தல் வரை இந்த பொறிமுறையின் கீழ் பணிகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முற்பகல் 8.30 முதல் பிற்பகல் 4.15 வரையில் அலுவலகத்திற்கு பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பணியாளர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கான அறிவிப்பு
எனவே குறித்த செவ்வாய் மற்றும் வியாழன் கிழமைகளில் சிவில் விமான சேவை அதிகார சபைக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.