கேரளா லாட்டரியில் தமிழகத்தை சேர்ந்த டாக்டருக்கு ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் பிரதீப்குமார் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் என்பவரும் கடந்த மே 15ஆம் தேதி வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த தங்கள் உறவினரை அழைப்பதற்காக அங்கு சென்றனர்.
அப்போது அங்கு விற்பனையான விஷு பம்பர் லாட்டரியை ஏஜெண்டு ஒருவரிடமிருந்து அவர்கள் வாங்கியுள்ளனர்.
தற்போது அந்த லாட்டரி சீட்டுக்கு ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த லாட்டரி சீட்டுடன் தகுந்த ஆவணங்களையும் திருவனந்தபுரத்தில் கேரள அரசு லாட்டரி பவனில் அவர்கள் நேற்று சமர்ப்பித்துள்ளனர்.