இரவு வானத்தை, அதன் நட்சத்திரங்கள் நிரம்பிய பிரபஞ்சத்தைப் பார்ப்பதில் ஏதோ ஒரு உற்சாகம் இருக்கிறது. தொழில்நுட்பத்தின் உதவியால், இரவு வானத்தில் விண்மீன்கள் எங்கு உள்ளன என்பதைப் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் உங்களை அனுமதிக்கும் பல நட்சத்திரங்களைப் பார்க்கும் ஆப்ஸ் உள்ளன.
இங்கே, நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில சிறந்த நட்சத்திர ஆப்ஸ் (stargazing apps) பட்டியலை நாங்கள் ஒன்றாக இணைத்துள்ளோம்.
கூகுள் ஸ்கை
கூகுள் மேப்ஸின் நட்சத்திர அனலாக் தான் கூகுள் ஸ்கை. கூகுள் ஸ்கை மூலம், ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப், ஸ்லோன் டிஜிட்டல் ஸ்கை சர்வே மற்றும் டிஜிட்டஸ் ஸ்கை சர்வே ஆகியவற்றிலிருந்து தரவைப் பயன்படுத்தி விண்வெளியைக் கண்காணிக்கலாம்.
கூகுள் மேப்ஸ், மாசு, மேகங்கள் அல்லது வேறு எதனாலும் தடையில்லாத வானத்தை உங்களுக்கு காட்டும். கூகுள் ஸ்கைக்கான ஆப்ஸ் இப்போது ஸ்கை மேப் என அறியப்படுகிறது, இது கூகுளால் நன்கொடையாக வழங்கப்பட்டு ஓப்பன் சோர்ஸாக மாற்றப்பட்டது.
ஸ்டார் டிராக்கர் (iOS மற்றும் Android)
Star Tracker செயலியானது 88க்கும் மேற்பட்ட விண்மீன்களையும் 8,000க்கும் மேற்பட்ட விண்வெளிப் பொருட்களையும் சூரியன், சந்திரன் மற்றும் கிரகங்கள் அனைத்தையும் நிகழ்நேரத்தில் காண்பிக்கும்.
Star Tracker ஆப்ஸ் iOS மற்றும் Android இரண்டிலும் கிடைக்கிறது மற்றும் இதில் AR மூட் உள்ளது, இது அனைத்து வான பொருட்களின் நிலைகளையும் குறிக்கிறது. இந்த ஆப், இலவசமாக கிடைக்கிறது. ஆனால் அட் ஃபிரீ வெர்ஷன் மற்றும் ஃபுல் வெர்ஷன் அதிக அம்சங்களைக் கொண்டுள்ளது.
ஸ்கைவியூ (iOS மற்றும் Android)
ஸ்கைவியூ ஆப் மூலம், உங்கள் மொபைலை வானத்தை நோக்கிக் காட்டலாம், இதில், விண்மீன் திரள்கள், நட்சத்திரங்கள், விண்மீன்கள், கிரகங்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தைக் கூட அடையாளம் காணலாம். இலவச மற்றும் கட்டண பதிப்புகள் இரண்டிலும் iOS மற்றும் Android இரண்டிலும் கிடைக்கிறது, இந்த ஆப்ஸ் அதிக இரவு மற்றும் AR அம்சத்தைக் கொண்டுள்ளது, இது உங்களை எல்லா நேரங்களிலும் பயன்படுத்த அனுமதிக்கிறது.
இது ஸ்கை பாத் (Sky Path) அம்சத்தையும் கொண்டுள்ளது, இது பயனர்கள் விண்வெளியில் உள்ள பொருட்களைக் குறிப்பிட்ட தேதிகள் மற்றும் நேரங்களில் அவற்றின் இருப்பிடத்தைக் காண அனுமதிக்கிறது. கடந்த காலத்தில் வானம் எப்படி இருந்தது மற்றும் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை பயனர்களுக்குத் தெரிவிக்கும் டைம் டிராவல் ஆப்ஷனும் இதில் உள்ளது.
ஸ்கைசஃபாரி (iOS மற்றும் Android)
ஸ்கைசஃபாரி ஆஸ்ட்ரோனாமி ஆப், கோள்கள், விண்மீன்கள், நட்சத்திரங்கள் மற்றும் செயற்கைக்கோள்களை அடையாளம் காண உதவுகிறது. Skyview போலவே, Skysafari ஆப், கடந்த காலத்தில் அல்லது எதிர் காலத்தில் வானம் எப்படி இருந்திருக்கும் என்பதைப் பார்க்கவும் பயன்படுத்தலாம்.
இது ஒரு விண்மீன் விளக்க அம்சத்தைக் கொண்டுள்ளது, இது விண்மீன்களை சரியாகக் காண முடியாவிட்டால் அவற்றை விளக்கும். இந்த செயலியானது பல புராண மற்றும் அறிவியல் தகவல்களுடன் வருகிறது.
நாசா ஆப் (iOS மற்றும் Android)
நாசாவின் புகைப்படக் கேலரியில் உள்ள ஆயிரக்கணக்கான படங்களைப் பார்ப்பது மட்டுமின்றி, நாசாவின் ராக்கெட் ஏவுதல்கள் மற்றும் கிரகணங்கள் போன்ற நாசா நிகழ்வுகளையும் நாசா டிவி மூலம் நேரடியாக ஒளிபரப்பலாம்.
இந்த செயலியில் NASA பணிகள் மற்றும் பிற விண்வெளி தொடர்பான செய்திகள் பற்றிய பல தகவல்களும் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“