புதுச்சேரி : ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சியின் மூலம் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து புதிய நம்பிக்கை பிறந்துள்ளது’ என பெற்றோர் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர் பகிர்ந்தவை:
கஜலட்சுமி, கடலுார்: நிறைய செலவு செய்து குழந்தைகளை படிக்க வைக்கிறோம். பிளஸ் 2 வந்த உடனே அவர்களை காட்டிலும் எங்களை போன்ற பெற்றோர்களுக்கு தான் பதட்டம் ஏற்படுகிறது. ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சி எங்களின் பதட்டத்தை போக்கி, பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க வைத்துள்ளது. அதற்காக பாராட்டுகள்.
சத்தியா, காட்டேரிக்குப்பம், புதுச்சேரி: வழிகாட்டி நிகழ்ச்சியில் ஏற்பாடுகள் அனைத்தும் சூப்பர்.கல்வியாளர்கள் மாணவர்கள், பெற்றோர்களுக்கு தெளிவாக விளக்கம் கொடுத்தனர். வழிகாட்டி நிகழ்ச்சியை மிஸ் செய்தால் மாணவ மாணவிகளுக்கு தான் இழப்பு. அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்தினர், கட்டாயம் மாணவர்களை சுற்றுலா போல் ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சிக்கு அழைத்து செல்ல வேண்டும்.
நூர் சாகித், வழுதாவூர், விழுப்புரம்: வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், உயர்கல்வி வழிமுறைகளை அறிந்து கொள்ள பல்வேறு வாய்ப்புள்ளது.இந்த வாய்ப்பை, ஏழை மாணவர்களுக்கும் தர வேண்டுமென்ற நோக்கில், இந்நிகழ்ச்சி ஆரம்பத்தில் நடத்தப்பட்டது. அதில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து, ஆண்டுதோறும் ‘தினமலர்’ நாளிதழ் நடத்தி வருவது பாராட்டுக்கு உரியது.
Advertisement