வேலூர்: மனைவி உயிரிழந்த சோகம்: மகளுடன் கணவன் எடுத்த விபரீத முடிவு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுக்கு முன்பு உயிரிழந்த மனைவி, வேதனையில் மகளுடன் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த டி.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் தினகரன் (52) இவரது மனைவி சிவக்குமாரி புற்றுநோய் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். மனைவியை இழந்த தினகரன் வேதனையிலும், மிகுந்த மன அழுத்தத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது.
image
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது தினகரன், மகள்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தினகரனை மீட்டுள்ளனர். இதையடுத்து தற்கொலை எண்ணத்தில் இருந்து மீளாத தினகரன் நேற்றிரவு வீட்டில் தனது இரண்டு மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதில் புடவை அறுந்ததால் மூத்த மகள் பவித்ரா (16) உயிர் தப்பியுள்ளார். தனது தந்தை மற்றும் சகோதரி தூக்கில் தொங்குவதை பார்த்த பவித்ரா அலறி கூச்சலிட்டுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்த போது தந்தை தினகரன் இளைய மகள் பிருந்தா (14) இருவரும் தூக்கில் சடலமாக கிடந்துள்ளனர்.
image
இதைத் தொடர்ந்து உயிர் தப்பிய மூத்த மகளை அழைத்துச் சென்று ஆறுதல் கூறினர். பின்னர் இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருதம்பட்டு காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியை இழந்த சோகத்தில் தனது மகளோடு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.