ஏர்டெல் பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம்: திடீரென போர்க்கொடி தூக்கிய சேல்ஸ் சங்கம்

ஏர்டெல் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என்றும் ஏர்டெல் சிம் கார்டுகள் மற்றும் ரீசார்ஜ் செய்ய மாட்டோம் என்றும் செல்போன் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் ரீசார்ஜ் நலசங்கம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் ஏராளமான வாடிக்கையாளர்கள் வைத்து லாபத்துடன் இயங்கி வரும் நிறுவனமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நிறுவனம் தமிழகத்தில் உள்ள விற்பனையாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்களை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், இதனை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்றும் ஏற்கனவே செல்போன் சர்வீஸ் மற்றும் ரீசார்ஜ் நலசங்கம் தெரிவித்திருந்தது.

30 நாளில் ரூ.1400 கோடி இழப்பு.. கதறி அழும் ராகேஷ் & ரேகா ஜூன்ஜூன்வாலா..!

மாநில தழுவிய போராட்டம்

மாநில தழுவிய போராட்டம்

இந்த நிலையில் இன்று ஏர்டெல் நிறுவனத்தை கண்டித்து மாநிலம் தழுவிய மிகப்பெரிய கண்டன மற்றும் முற்றுகை போராட்டத்தை செல்போன் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் ரீசார்ஜ் நலசங்கம் நடத்தி வருகிறது. வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், விநியோகிஸ்தர்களுக்கான சேவை மைய எண்கள் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையை விற்பனையாளர்களுக்கு நிறுத்தியுள்ளதாகவும் விற்பனையாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஏர்டெல் சிம்கார்டு

ஏர்டெல் சிம்கார்டு

அதுமட்டுமின்றி ஏர்டெல் நிறுவனத்தின் முகவர்கள் நேரடியாக தெரு ஓரங்களில் கடை போட்டு ஏர்டெல் சிம் கார்டுகளை விற்பனை செய்வதாகவும், ஆனால் தங்களுக்கு மட்டும் தினமும் இரண்டு சிம் கார்டுகளை விற்பனை செய்தால் மட்டுமே ரீசார்ஜ் செய்வதற்கு அனுமதி அளிப்போம் என்றும் நிபந்தனை விதிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இன்று ஒரு நாள் மட்டும்
 

இன்று ஒரு நாள் மட்டும்

எனவே ஏர்டெல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இன்று ஒரு நாள் மட்டும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வருவதாகவும், இதன்படி ஏர்டெல் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என்றும், இன்று ஒருநாள் ஏர்டெல் ரீசார்ஜ் செய்ய மாட்டோம் என்றும் செல்போன் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் ரீசார்ஜ் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

குற்றச்செயல்

குற்றச்செயல்

ஏர்டெல் நிறுவனத்தின் முகவர்கள் நேரடியாக சிம் கார்டு விற்பனை செய்யும்போது வாடிக்கையாளர்கள் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கி ஆக்டிவேட் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு சிம்கார்டு விற்பனை செய்வதில் ஏர்டெல் துணை புரிந்து வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சர்வாதிகார போக்கு

சர்வாதிகார போக்கு

ராணுவத்திற்கும், அரசுக்கும், காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற சேவையை வழங்கி வரும் ஏர்டெல் நிறுவனத்தின் தான்தோன்றித்தனமான, சர்வாதிகாரப் போக்கை கண்டித்து இன்று ஒரு நாள் மட்டும் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக அனைத்து செல்போன் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் மற்றும் ரீசார்ஜ் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

We will not sell Airtel products: Cellphone Sales & Service Strike Announcement

We will not sell Airtel products: Cellphone Sales & Service Strike Announcement | ஏர்டெல் பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம்: திடீரென போர்க்கொடி தூக்கிய சேல்ஸ் சங்கம்

Story first published: Tuesday, May 31, 2022, 14:11 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.