சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. இது இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ? என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்ய எண்ணெய்-க்கும் தடை விதிக்க ஒப்புக் கொண்டுள்ளதையடுத்து விலையானது உச்சம் எட்டியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் இந்த நடவடிக்கையானது ரஷ்யாவினை குறி வைத்து திட்டமிடப்பட்டிருந்தாலும், இது உலக நாடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
ஏர்டெல் பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம்: திடீரென போர்க்கொடி தூக்கிய சேல்ஸ் சங்கம்
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை
ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் இன்னும் பிரச்சனையானது, இன்னும் முடிவுக்கு வரவில்லை. இது இன்றளவிலும் பிரச்சனையாகவே உள்ளது.
இதற்கிடையில் தான் சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 122 டாலர்களை எட்டியுள்ளது. இது ஐரோப்பிய நாடுகளின் தடைக்கு மத்தியில் ஏற்றம் கண்டு வருகின்றது. இந்த நாடுகள் ரஷ்யாவில் இருந்து பெரும்பகுதி எண்ணெய்-ஐ இறக்குமதி செய்கிறது.
இறக்குமதி
இந்த தடை காரணமாக ரஷ்யாவின் 75% எண்ணெய் இறக்குமதியில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆசிய நாடுகளுக்கு நீண்ட வழிகளில் செல்ல கட்டாயப்படுத்துகிறது, மேற்கு ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய்க்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.
இந்தியா அதிகம்
இந்தியாவில் கடல் வழியாக இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் இறக்குமதியானது, ஏப்ரல் மாதத்தில் ஒரு நாளைக்கு 4.8 மில்லியன் பேரல்களை தாண்டியுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் 5% மேலாக இருந்தது. இது கடந்த ஆண்டில் 1% கீழாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இறக்குமதி சரிவு
சர்வதேச அளவில் எண்ணெய் விலையானது உச்சத்தினை எட்டியுள்ள நிலையில், 2014 – 15ம் நிதியாண்டில் இருந்து உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்து, 2022ம் நிதியாண்டிக்ல் வெறும் 28.4 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இதே இந்தியாவிலும் உற்பத்தியானது 11.8% சரிவினைக் கண்டு, 32.2 MT குறைந்துள்ளது.
எச்சரிக்கை
எனினும் ஐரோப்பிய ஒன்றிய குழு தடை விதிக்க திட்டமிட்டாலும், ஹங்கேரி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தடை ஒப்பந்தம் அமலுக்கு வரவேண்டுமெனில், 27 நாடுகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
முன்னதாக போலந்து, பல்கேரியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தினை குறைத்த பின்னர், டச்சு எரிசக்தி நிறுவனத்திற்கு பைப் மூலமாக ஏற்றுமதி செய்வதை ரஷ்யா நிறுத்தபோவதாக எச்சரித்துள்ளது.
கட்டண விதிமுறைகள்
ரஷ்யாவின் புதிய கட்டண விதிமுறைகலை ஏற்க மறுத்த நிலையில், ரஷ்யா இதுபோன்ற எச்சரிக்கைகளை விதித்து வருகின்றது. இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது பெரும் உச்சத்தினை எட்டியுள்ளது.
Crude oil trade nearly $120 after EU bans 90% of russian crude
Prices have peaked as EU countries have agreed to a ban on Russian oil.