மயிலாடுதுறையில் ஆய்வு: மகளை டாக்டராக்கிய ஏழை மீனவ பெண்மணியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

நாகை: மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில், மீன்களை கழுவி சுத்தம் செய்யும் பணியை செய்து தனது மகளை மருத்துவம் படிக்க வைத்த திருமதி ரமணி, அவரது மகள் மருத்துவர் விஜயலட்சுமி மற்றும் சகோதரர் ஆகியோர்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். மேலும் பல பகுதிகளுக்கு சென்று தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். 

2நாள் பயணமாக டெல்டா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு  சிறப்புத் திட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் தூர்வாரிய பணிகளை  ஆய்வு செய்து வருகிறார். இன்று நாகையில் ஆய்வு செய்த முதலமைச்சர் மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி நேரடி நெல் விதைப்பு முறை, இயந்திர நடவு முறை மற்றும் தூர்வாரப்பட்ட வாய்க்கால்களை ஆய்வு செய்தார். தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலத்தில் நேரடி நெல் விதைப்பு முறையான ட்ரம்சீடர் முறையில் விதைப்பு செய்யும் பணிகளைப் பார்வை யிட்டார்.

தொடர்ந்து திருக்கடையூரில் முதலமைச்சரின் சிறப்பு திட்டத்தில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். அங்கு திரண்டிருந்த விவசாயிகள், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.  பின்னர் நல்லாடை கிராமத்தில் இயந்திர நடவு மூலம் நாற்றுகள் நடவு செய்யும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு விவசாயிகள், பொதுமக்களை சந்தித்தார்.

தொடர்ந்து,  திருக்கடையூரில் ஆய்வை முடித்துக் கொண்டு அங்கு உள்ள தங்கும் விடுதி ஒன்றில், மயிலாடுதுறையில் மகள் விஜயலட்சுமியை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்த நகராட்சி மீன் மார்க்கெட்டில் மீன்களை கழுவி சுத்தம் செய்யும் தாயார் ரமணியை வரவழைத்து வாழ்த்து தெரிவித்தார். மீன் மார்க்கெட்டில் கூலிவேலை செய்யும் ரமணி மகளின் படிப்பிற்காக வீடு நகைகளை விற்று மருத்துவ படிப்பு படிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆய்வின்போது, அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மெய்யநாதன், கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதாமுருகன், பன்னீர் செல்வம், ராஜகுமார், மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளையும், குறுவை சாகுபடி பணிகளையும் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்ததாக திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்ய புறப்பட்டுச் சென்றார்.

#tdi_1 .td-doubleSlider-2 .td-item1 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/Myladuthurai-Stlain-31-05-12.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item2 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/Myladuthurai-Stlain-31-05-11.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item3 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/Myladuthurai-Stlain-31-05-10.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item4 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/Myladuthurai-Stlain-31-05-09.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item5 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/Myladuthurai-Stlain-31-05-08.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item6 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/Myladuthurai-Stlain-31-05-06.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item7 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/Myladuthurai-Stlain-31-05-05.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item8 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/Myladuthurai-Stlain-31-05-04.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item9 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/Myladuthurai-Stlain-31-05-03.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item10 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/Myladuthurai-Stlain-31-05-02.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item11 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/Myladuthurai-Stlain-31-05-01.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item12 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/Myladuthurai-Stlain-31-05-07.jpg) 0 0 no-repeat;
}

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.