வரும் கல்வியாண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படம் ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடமாக டெய்லரிங், பியூட்டிஷியன் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. இதனை வரும் கல்வியாண்டு முதல் ரத்து செய்ய உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
மத்திய அரசின் நிதியிலிருந்து ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் தொழிற்கல்வி டெய்லரிங், பியூட்டிஷியன் பாடங்கள் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 5 பாடங்களில் அப்படியே நடைமுறையில் இருக்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு தெரிவித்துள்ளது.
மேலும், நடப்பு கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.