வயது உயர்த்தப்பட்டதற்கு பின் நடக்கும் முதல் பணி ஓய்வு: ஒரேநாளில் 5,300 பேருக்கு ஓய்வு

ஓய்வு பெறக்கூடிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வயது 60 ஆக உயர்த்தப்பட்ட பின்பு இன்று முதன் முறையாக அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளனர். இதில் இன்று ஒரே நாளில் சுமார் 5,300 பேர் ஓய்வு பெறுகின்றனர்.
தமிழகத்தில் 9 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் ஒய்வு பெறும் வயது, கடந்த 2020-ம் ஆண்டு 58 இல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் கடந்த இரண்டு வருடங்களாக ஓய்வு பெறாமல் இருந்த நிலையில், இன்று அவர்கள் அனைவரும் மொத்தமாக ஓய்வு பெறுகிறார்கள்.
image
கடந்த காலங்களில் பெரும்பாலும் அரசு ஊழியர்கள் பணியில் சேரும் காலம் மே, ஜூன் என்றே இருக்கும் என்பதாலும் ஆசிரியர்களைப் பொறுத்தவரை கல்வி ஆண்டின் இறுதியில் தான் ஓய்வு பெறுவார்கள் என்பதாலும் இதுபோல ஒரேநேரத்தில் ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க… “ஆணாக பிறந்திருக்கலாம்”-மாதவிடாய் வலியால் பிரெஞ்ச் ஓபனை தவறவிட்ட சீன வீராங்கனை வேதனை
முன்னதாக ஓய்வு பெறும் வயது 62 வயதாக உயர்த்தப்படலாம் என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில் இன்று இத்தனை பேருக்கு பணி ஓய்வு கிடைத்திருப்பதன் மூலம் அதற்கு முற்று புள்ளி வைக்கப்பட்டது. அரசுப் பணிகளை பொறுத்தவரை தற்போது சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருக்கும் நிலையில், ஒய்வு பெறக்கூடியவர்களின் எண்ணிக்கையும் சேர்க்கும்போது காலியிடங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பபட்டும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.