ஏதேனும் ஒரு அநாதை முகாமில் போய் இருக்க வேண்டிய நிலைமை தான் இருப்பதாக பெண்ணொருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் வீட்டுக்கூலி கட்டுவதா? சாப்பிடுவதா? 11ஆம் மாதத்திற்குள் கடும் பஞ்சம் ஏற்படும் என சொல்கிறார்கள்.
நாங்கள் என்ன செய்வது?
அதிகாலை நான்கு மணிக்கு சென்றோம் மண்ணெண்ணெய் எடுப்பதற்கு.
மழைக்கு மத்தியில் வரிசையில் காத்திருந்த போதும் எனினும் மண்ணெண்ணெய் இல்லை என திரும்பிச் செல்ல கூறி விட்டார்கள் என தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.