சாலையில் சென்று கொண்டிருந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் ஒருவரின் வளைகாப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மைசூர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது செம்மண் திட்டு என்ற பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது கார் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த அனைவரும் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.