கொல்கத்தா:
வரும் பாராளுமன்ற தேர்தலின்போது மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஜூன் முதல் வாரத்தில் அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் புர்லியா பகுதியில் நடந்த கூட்டத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
வரும் 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. எவ்வளவு முயன்றாலும் வெற்றிபெறப் போவதில்லை. நீங்கள் எப்போதும் உள்ளே நுழைய முடியாது.
2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு இடமில்லை என நாட்டு மக்கள் இப்போதே கூறத் தொடங்கி உள்ளனர் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்…இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2,338 ஆக குறைந்தது