இரவு 11 :30 மணி,
ப்ரியா, தனது அபார்ட்மெண்டுக்கு வந்ததும், பார்கிங்க்கு அருகில் உள்ள லிப்ட் பட்டன் அழுத்த சர்ர்ர்ர்ர் என்று லிப்ட் கீழே வந்தது. கதவு திறந்ததும், மெதுவாக அவள் தலையை உரசிக்கொண்டே காற்று சென்றது, சிரித்து கொண்டே, உள்ளே சென்றாள். 13 பட்டனை அழுத்தியதும், கதவு மூடியது, லிப்ட் சர்ர்ர்ர்ர் என்று மேல போனது.. மேலே போக போக, மெதுவாக லைட் மினுமினுக்க..
இதுவேறயா, என்று புலம்பி கொண்டே,
கண்ணாடியை பார்த்து கொண்டு இருந்த ப்ரியா,
“காலைலேந்து எவ்ளோ அலைச்சல், மூஞ்சி இவ்ளோ tired ஆகிப்போச்சு. ஹவுஸ் ஓனர், செக்யூரிட்டி எதுக்கு இத்தனை தடவ கால் பண்ணியிருக்காங்க தெரில.. போன் இருந்தா அடிச்சு கிட்டே இருக்கணுமா என்ன…irritating .பசிக்குது வேற, போய் சமைக்க சோம்பேறித்தனமா இருக்கு, இந்த ஆபீஸ் டென்ஷன் வேற, என்று ஏதோ ஏதோ பேசி கொண்டே இருக்க.. But, ப்ரியா நீ அழகிடி, தலையை கோதிக்கொண்டே இருக்கும் பொழுது”
13th floor என்று லிப்ட் சொல்ல, கதவு திறந்தது, வெளியே வர, மெதுவாக அவள் தலையை உரசிக்கொண்டே காற்று சென்றது, சிரித்து கொண்டே, தக் தக் தக் சத்தத்துடன் ப்ரியா நடந்து கொண்டே போக, கடைசியில் இருந்த தன் வீட்டுக்கு வந்ததும், handbag யில், வீட்டு சாவியை தேடி கொண்டே,
“ச்சே…. கிளம்ப அவரசத்துல எந்த ஜிப் தெரில, ஹ்ம்ம் இருட்டா வேற இருக்கு, இங்க மட்டும் லைட்ட காணூம்”
என்று தேட தேட, போன் ரிங் அடிக்கிறது, பார்த்தால் house owner , இவர் எதுக்கு இந்த நேரத்துல.. மொனகி கொண்டே போன் எடுத்ததும்,
“hello சொல்லுங்க சார்,
அதற்கு house owner சாரி ப்ரியா மேடம், untime..
உடனே,
ப்ரியா “பரவாயில்ல சார், சொல்லுங்க..’’
அதற்கு house owner , மேடம் , நீங்க EB bill மூணு மாசமா கட்டவே இல்லையா, phone அடிச்சாலும் எடுக்கல நீங்க. நானு, செக்யூரிட்டி மாறி மாறி அடிச்சோம். EB காரன் வந்து பியூஸ் புடிங்கட்டு போய்ட்டான்..எவ்ளோ கட்டணும் தெரியாது, உங்கள புடிக்கறது கஷ்டமா வேற இருக்கு.. நான் வீட்டுக்கு வந்துட்டு வந்துட்டா போக முடியும், சின்ன சின்ன விஷியத்தை தள்ளாதீங்க மேடம், பாத்துக்கோங்க, என்று ஹவுஸ் வுணர் பேச பேச…
சரிங்க, நான் ஒன்னும் குழந்தை இல்ல, அட்வைஸ் பண்ணாதீங்க சார், நான் பாத்துக்கிறேன்.. தேங்க்ஸ் “
என்று சொல்லி கொண்டே போன் அப்படியே கட் செய்து, பாக்கெட்டில் வைத்து கொண்டு, மெதுவாக, கதவின் ஓட்டை வழியாக சாவியை விட்டு, திறக்க முடியவில்லை..மறுபடியும் முயற்சிசெய்ய முடியவில்லை.. ஒரு வித கடுப்பில், “oh சே, தப்பான கீ.. பவர் வேற இல்ல, இந்த இருட்டுல கண்ணும் தெரியல.. எப்படி தூங்கறது, முதல உள்ள போவோம்’’, என்று சொல்லி ஒரு வழியாக உள்ளே வந்தால் ப்ரியா..
“ச்சே, கருமம் என்ன திடீர்னு ஒருமாதிரி smell வருது.. எங்கன்னு வேற தெரில.. ஐயோ பசிக்குதே’’, என்று சொல்லிக்கொண்டே.
செப்பலை கழட்டிவிட்டு, உள்ளே சென்று அங்கிருந்த சோபாவில் handbag , மற்றும் பாக்கெட்டில் இருந்த போன் இரண்டையும், தூக்கி போட்டாள். வேகமாக கிச்சனுக்கு சென்று, பிரிட்ஜ் ஓபன் செய்து தண்ணீர் குடித்து கொண்டு இருக்கும் பொழுது, போன் அடித்தது…
கிச்சனில் இருந்த சுவற்றில், மொபைல் வெளிச்சம் அடிக்க..
“அடுத்து யாரு செக்யூரிட்டியா’’, என்று சொல்லிக்கொண்டே
அரைகுறையாக தண்ணீர் குடித்துக் கொண்டே, மெதுவாக அந்த மொபைல் வெளிச்சத்தில் சோபா அருகில் வந்து, தொட்டு பார்த்ததும் போன் திரும்பி இருந்தது, கையில் எடுத்து,
“டேய், என்னடா வேணும் உனக்கு ?’’ என்று டென்ஷனோடு போன் எடுத்தாள்..
“hello சொல்லுங்க சார்,’’
அதற்கு house owner, “சாரி ப்ரியா மேடம், untime’’ ,
ப்ரியா, “பரவாயில்ல சார், எத்தனை தடவ இதையே சொல்லுவீங்க..’’
அதற்கு house owner, “மேடம் சாரி,
நீங்க EB bill மூணு மாசமா கட்டவே இல்லையா,
phone அடிச்சாலும் எடுக்கல நீங்க.
நானு, செக்யூரிட்டி மாறி மாறி அடிச்சோம்..
EB காரன் பியூஸ் கழட்ட வந்துட்டான்’’, என்று அவர் பேச பேச..”
ப்ரியா டென்ஷன் ஆகி,
“சார், ஏன் சார் சொன்னதேயே சொல்லறீங்க,
“மேடம் நான் இப்போதான் கால் பண்றேன்’’ என்று அவர் சொல்ல..
அதை ப்ரியா காதில் வாங்கி கொள்ளவில்லை..
“சார், இப்போதான் கால் பன்னீங்க, பணம் கட்டலை, போன் எடுக்கல, கரண்ட் இல்ல, சொல்லிட்டு வெச்சுடீங்க..’’
அதற்கு,
ஹவுஸ் வுணர் சிரித்து கொண்டே…
“மேடம் நீங்க ஏதோ டென்ஷன்ல இருக்கீங்க,
நான் இப்போதான் கால் பண்றேன்,
நீங்க சொல்லற எல்லாமே கரெக்ட்..
நீங்க பணம் கட்டலை, போன் எடுக்கல, EB பியூஸ் கழட்டிட்டாங்க,
அப்பறம், நீங்க வேற தனியா இருக்கீங்க கரண்ட் இல்லாம என்ன பண்ணுவீங்க, அதான் செக்யூரிட்டி போன் பண்ணி எனக்கு சொல்லிட்டாரு, உடனே நான் வந்து, கேட்டேன் 5000 தரணும் சொன்னாங்க, நேரா EB ஆபீஸ் போய் பணத்தை கட்டிட்டு, இங்க பியூஸ் போட ஆளே வரல. அப்பறம், நானே பியூஸ் மாட்டிட்டேன், இருந்தாலும் கரண்ட் வரல, உள்ளே ஏதோ ட்ரிப் ஆயிருக்கும் போல, சாவி இல்லாம எங்க உள்ள போறது.. எனக்கு ஒரு அவசர வேலை, நானும் கிளம்பிட்டேன், அதான், உங்களுக்கு போன் பண்ணி, கீழ் பக்கமா இருக்கற ட்ரிப் சுவிட்ச் மேல ஏத்துங்க கரண்ட் வந்தரும் சொல்லத்தான் கூப்பிட்டேன்.. ஹ்ம்ம்ம் அப்பறம், அடுத்த மாசம் வாடகை தரப்போ, இந்த 5000 சேர்த்து தாங்க”
என்று அவர் சொன்னதும்.. ஒரு வினாடி, ஒன்னும் புரியவில்லை ப்ரியாவுக்கு..
“அப்போ நீங்க கால் பண்ணலையா?’’
“இல்ல மேடம்.. “
உடனே ப்ரியா டக்கென்று, கால் log ஓபன் பண்ண, பேட்டரி அவுட் என்று சொல்லி போன் ஆப் ஆனது..
“தேவை இல்லாம கால் பண்ணி டென்ஷன் பண்றதே வேலையா போச்சு”
மெதுவாக, தடவி தடவி வீட்டின் நுழைவு வாயில் இருக்கும் EB box ஓபன் செய்து, கீழே இருந்த, ட்ரிப் மேல தூக்கியதும்… டப்பு என்று ஹால் பல்பு வெடித்தது, கூடவே ஒரு அழுகுரலும் கேட்டது.. அலறி அடித்து கொண்டே, bedroom வேகமா சென்று, கதவை சாத்தி, இருக்கும் எல்லா தாழ்ப்பாளையும் போட்டு விட்டு, மிகுந்த பயத்துடன், அவளுக்கு பிரியமான teddy பொம்மையை கட்டி பிடித்து கொண்டே இருக்க, சற்று வினாடிகளில் அழுகுரல் நின்றது, உதவி கேட்க வழியில்லை, தனிமையில் அழவும் பயம், கத்தவும் பயம், வெளியே போகவும் பயம்.. எல்லாம் ஒன்று சேர்ந்து, வேண்டாத தெய்வம் யில்லை, பயத்தில் teddy அழுத்தி கட்டி கொண்டே, தூங்கி போனால் ப்ரியா..
நள்ளிரவு 3 மணி..
Teddy யை கட்டி பிடித்து தூங்கிய ப்ரியா,
மூன்று மணிக்கு பிறகு Teddy அவளை கட்டிபிடித்தது..
ஒரு வித சிரிப்புடன்.
கட் கட் கட்…
Lights ON என்று டைரக்டர் சொல்ல
டக் டக் டக் டக் என்று எல்லா லைட்டும் எரிய,
ஷாட் ஓகே மேடம்..
சூப்பர் என்று சொல்லி கூப்பிட,
ப்ரியா வரவில்லை,
Teddy யும் விடவில்லை..
லைட் மெதுவாக
டக் டக் டக் என்று மினுமினுக்க,
எல்லாரும் மேலே பார்க்க,
கீழே,
ப்ரியாவின் குரல் மட்டும் வந்தது..
Lights OFF!
முற்றும்..
எழுத்தும், கற்பனையும்
கல்யாணராமன் நாகராஜன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.