குடும்ப தகராற்றில் மனைவி மற்றும் மாமனார் மாமியாரை கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் நகரில் ஷிவ் நகர் பகுதியில் வசித்து வருபவர் சுனில். இவர் முதல் 2 மனைவிகளை விவாகரத்து செய்த நிலையில் ஷில்பி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 வயதில் மகன் ஒருவன் உள்ளான். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.
சம்பவதன்று, இருவருக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை சமாதானப்படுத்த அவரது மாமனார், மாமியார் வந்தனர். அவர்கள் சமாதானம் செய்யும் போது ஆத்திரமடைந்த சுனில் ஷில்பியை சுட்டு கொலை செய்தார்.
அதன்பின்னர் அவரது மாமனார் மாமியாரையும் கொலை செய்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சுனிலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.