இந்தியாவின் ஜிடிபி விகிதம் Q4ல் 4.1% ஆக வளர்ச்சி.. FY22ல் 8.7% ஆக வளர்ச்சி..!

இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது எதிர்பார்த்ததை போல பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் 4வது காலாண்டில் சற்று மெதுவான வளர்ச்சியினை கண்டு, 4.1% ஆக வளர்ச்சி கண்டுள்ளது.

இதுவே கடந்த 2022ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது 8.7% ஆக வளர்ச்சி கண்டுள்ளது.

சர்வதேச அளவில் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது சற்று மெதுவான வளர்ச்சியிலேயே இருந்து வருகின்றது. இதற்கிடையில் இன்று 4ம் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி விகிதமானது அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்தியாவின் ஜிடிபி வெளியாகலாம்.. மோசமான தாக்கம் இருக்கலாம்.. கவலையளிக்கும் கணிப்புகள்!

முக்கிய துறைகளின் வளர்ச்சி

முக்கிய துறைகளின் வளர்ச்சி

விவசாயத் துறையில் வளர்ச்சி – 3%

சுரங்கத்துறை – 11.5%

உற்பத்தி துறை – 9.9%

மின்சாரம் , கேஸ் – 7.5%

உள்கட்டமைப்பு துறை – 11.5%

டிரேட் & ஹோட்டல்ஸ் – 11.1%

நிதித்துறை, ரியால்டி – 4.2%

பொதுத்துறை – 12.6%
விவசாயத் துறையில் வளர்ச்சி – 3%

சுரங்கத்துறை – 11.5%

உற்பத்தி துறை – 9.9%

மின்சாரம் , கேஸ் – 7.5%

உள்கட்டமைப்பு துறை – 11.5%

டிரேட் & ஹோட்டல்ஸ் – 11.1%

நிதித்துறை, ரியால்டி – 4.2%

பொதுத்துறை – 12.6%

ரியல் ஜிடிபி

ரியல் ஜிடிபி

இந்தியாவின் ரியல் ஜிடிபி விகிதமானது 2021 – 2022ல் 147.36 லட்சம் கோடியை எட்டலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஜனவரி 31 அன்று வெளியிடப்பட்ட முதல் திருத்தப்பட்ட ,மதிப்பானது 135.58 லட்சம் கோடியை விட அதிகமாகும்.

நாமினல் ஜிடிபி
 

நாமினல் ஜிடிபி

நாமினல் ஜிடிபி விகிதமானது நடப்பு விலையில், 2021 – 2022ம் நிதியாண்டில் 236.65 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 198.01 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்ப்ப்து 19.5% அதிகமாகும்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

இது குறைந்த அடிப்படை திறன் காரணமாக அதிகமாக உள்ளது. இது கடந்த 2000ம் ஆண்டில் இருந்து பார்க்கும்போது மிக அதிகமாக உள்ளது. கடந்த நிதியாண்டில் கொரோனா பரவல் காரணமாக பொருளாதார வளர்ச்சி விகிதமானது 6.6% வீழ்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் மூன்றாம் அலையினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், அது விரைவில் முடிவுக்கு வந்தது.

ரஷ்யா உக்ரைன் பிரச்சனை

ரஷ்யா உக்ரைன் பிரச்சனை

எனினும் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை காரணமாக சர்வதேச அளவில் சப்ளை சங்கிலியில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு மூலதன பொருட்கள், உணவு பொருட்கள், தானியங்கள், சமையல் எண்ணெய், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பலவற்றின் விலையும் பெரியளவில் ஏற்றம் கண்டது. இதன் காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கம் என்பது மிகப்பெரிய சவலாக எழுந்துள்ளது. அதோடு இன்னும் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையானது முடிவுக்கு வந்த பாடாக இல்லை. இதன் காரணமாக வரவிருக்கும் காலாண்டிலும் இதன் எதிரொலி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India’s GDP growth expands to 4.1% in march quarter

India’s growth rate, as expected, slowed to 4.1% in the 4th quarter amid various factors.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.