சிவில் சர்வீஸ் தேர்வில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழக தேர்வர்களின் தேர்ச்சி மிகக் குறைவாக பதிவாகியுள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 685 பேரில் 27 பேர் மட்டுமே, தமிழகத்திலிருந்து தேர்வாகி இருக்கின்றனர். 2014ஆம் ஆண்டு 10 சதவிகிதமாக இருந்த தமிழக தேர்வர்களின் தேர்ச்சி விகிதம் அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக குறைந்தது.
2017இல் 4 சதவிகிதமாக இருந்தது. அதாவது எண்ணிக்கையில் அடிப்படையில் 42 பேர். அடுத்த ஆண்டுகளில் சற்று அதிகரித்த தேர்ச்சி எண்ணிக்கை 2020இல் மீண்டும் குறைந்து தேர்ச்சி விகிதம் 4.7 சதவிகிதமானது. எண்ணிக்கையில் 36 பேர்.
ஆனால், இந்தாண்டு 27 பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர். அதாவது 3.94% பேர் மட்டும். எண்ணிக்கையில் அடிப்படையிலும் சரி, சதவிகித அடிப்படையிலும், இந்தாண்டு தேர்ச்சி பெற்றோர் மிகக் குறைவாக உள்ளனர்.
சிவில் சர்வீஸ் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படுவது, முறையான தனிப்பட்ட பயிற்சி கிடைக்காமல் போனது, ஆய்ந்தறியும் வகையிலான வினாக்களுக்கேற்ப தயார்படுத்தாத கல்வி முறை போன்றவற்றைக் காரணங்களாக துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
newstm.in