பிரித்தானியாவில் ஒரு பெண் இறந்து பிறந்த தனது குழந்தையை டப்பர்வேர் டப்பாவில் அடைத்து வீட்டின் குளிர்சாதன பெட்டிக்குள் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் லாரா பிராடி என்ற பெண் கருவுற்ற நான்கு மாதத்தில் கருச்சிதைவுக்கு ஆளானார். அவர் தனது காதலன் லாரன்ஸ் வைட்டுடன், தனது கருவை வெளியே எடுப்பதற்காக லூயிஷாமில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஆனால், படுக்கைகள் இல்லாததால் மருத்துவமனையால் திருப்பி அனுப்பப்பட்ட்டுள்ளார். பின்னர், இருவரும் வீட்டிற்கு சென்று, கழிவறையில் இறந்த குழந்தையை பிரசவித்ததாகவும், இறந்து பிறந்த கருவை டப்பர்வேர் டப்பாவில் அடைத்து, வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இடத்தை ஒதுக்கி வைத்ததாக இருவரும் கூறியுள்ளனர்.
Photo: BBC
மேலும், இறந்த குழந்தையை சேமிக்க வசதி இல்லை என்பது போல் மருத்துமனை ஊழியர்கள் கூறியதாகவும் கணவன் மனைவி இருவரும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை தற்போது விசாரணையை தொடங்கியுள்ளது.
கார்டியன் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த லாரா பிராடி, இதற்கு முன்பே ஒருமுறை தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறியுள்ளார். மேலும், மருத்துவ மேற்பார்வையின்றி வீட்டிலேயே குழந்தையைப் பெற்றெடுக்க வாய்ப்பில்லை என்று மருத்துவமனை ஊழியர்களால் கூறப்பட்டதாகவும் கூறினார்.
ஆனால் பிராடி, கர்ப்பமாக இருந்த நான்கு மாதங்களில், வீட்டில் உள்ள கழிப்பறையில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
Photo: BBC
அவர்கள் மருத்துவமனையை அடைந்ததும், தம்பதியினர் சுமார் 20 அல்லது 30 பேருடன் சூடான மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படக்கூடிய பொது காத்திருப்பு அறையில் காத்திருக்கச் சொன்னார்கள்.
“தங்கள் குழந்தையின் எச்சங்கள் ஒரு டப்பர்வேர் பெட்டியில் முடிவடைவதை யாரும் விரும்ப மாட்டார்கள். அது பக்கவாட்டில் தள்ளப்பட்டு, ஊழியர்களால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டது, மேலும் அது குப்பையைப் போல் நடத்தப்பட்டது,” என்று பிராடி தி கார்டியனிடம் கூறினார் .
39 வயதான அவர், உலகளாவிய கருச்சிதைவுகள் குறித்த ஆவணப்படத்தைப் பார்த்த பிறகு தனது அனுபவத்தைப் பற்றி பேச முடிவு செய்ததாகக் கூறினார். இப்படி சில சம்பவங்கள் 2022-ல் லண்டனில் நடக்கின்றன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் பிராடி கூறியுள்ளார்.