இலங்கையின் முக்கிய பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது.
இது மே மாதத்தில் 39.1 சதவீதமாக உயர்ந்துள்ளதென இன்றைய தினம் வெளியான புதிய புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.
அதிகரிக்கும் பணவீக்கம்
இதேவேளை, மே மாதத்தில் உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதமாக பதிவாகியுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
மே மாதத்தில் உணவு அல்லாத பணவீக்கம் 30.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பணம் அச்சிட்டால் பணவீக்கம் மேலும் உயர்வடைந்து பொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.