உணவு சேவை நிறுவனமான ஜூப்லியண்ட் ஃபுட்வொர்க்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமீர் கேதர்பால் என்பவர் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் ஜூப்லியண்ட் ஃபுட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக செயலாளர் மற்றும் நிர்வாக இயக்குனராக பணி புரிவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூப்லியண்ட் ஃபுட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த பிரதீப் போட்டால் என்பவருக்கு பிறகு சமீபத்தில் சமீர் கேதர்பால் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உணவு, பிட்காயின், தங்கம் வாங்கி வைங்க.. ஏன்..? ராபர்ட் கியோசாகி சொல்லும் காரணத்தை பாருங்க!
ஜூப்லியண்ட் ஃபுட்வொர்க்ஸ்
ஜூப்லியண்ட் ஃபுட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ள சமீர் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அமேசான் பிரெஷ், அமேசான் புட் மற்றும் அமேசான் பார்மசி போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஜூப்லியண்ட் ஃபுட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வந்துள்ளார். அமேசான் நிறுவனத்திற்கு முன் அவரும் மெக்கென்சி நிறுவனத்தின் பங்குதாரராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்
இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்லூரியின் முன்னாள் மாணவரான சமீர், அதற்கு முன்னர் ஜிஈ கேப்பிட்டல் மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்களிலும் பணிபுரிந்துள்ளார்.
உணவுப்பொருள்
இந்தியாவில் டாமினோ பீட்சா மற்றும் டன்கின் பிராண்டுகளை சிறப்பாக வழிநடத்தி வரும் ஜூப்லியண்ட் ஃபுட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் உணவு பொருள் தயாரிப்பில் தொழில்நுட்பத்தை ஈடுபடுத்தி தரமான பிராண்ட்கள் காரணமாக வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.
புத்துணர்ச்சி
மேலும் தற்போது ஜூப்லியண்ட் ஃபுட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சி.இ.ஓ மாறியுள்ளதால் புத்துணர்ச்சியுடன் செயல்படும் என்றும் இந்நிறுவனத்தின் தலைவர் ஷியாம் எஸ். பார்டியா, மற்றும் இணைத் தலைவர் ஹரி எஸ். பார்டியா கூறியுள்ளனர்.
வாடிக்கையாளர் சேவை
இந்த நிலையில் ஜூப்லியண்ட் ஃபுட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் பொறுப்பேற்க இருக்கும் சமீர் செய்தியாளர்களிடம் கூறியபோது ‘இந்தியாவின் மிகப்பெரிய உணவு சேவை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஜூப்லியண்ட் ஃபுட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும், மேலும் இதன் தனித்துவம் மாறாமல் இருக்கும் முன்மாதிரியை தொடர்ந்து செயல்படுத்தி எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
நிதிநிலை அறிக்கை
ஜூப்லியண்ட் ஃபுட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் நிதிநிலை அறிக்கை கடந்த திங்களன்று வெளியான நிலையில், கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 12.87 சதவீதம் அதிகரித்து ரூ.1,157. 88 கோடி வருமானம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sameer Khetarpal appointed MD & CEO of Jubilant Foodworks
Sameer Khetarpal appointed MD & CEO of Jubilant Foodworks | ஜூப்லியண்ட் ஃபுட்வொர்க்ஸ் நிறுவனத்தின் புதிய மேனேஜிங் டைரக்டர் மற்றும் சி.இ.ஓ யார் தெரியுமா?