இலங்கையில் தமிழ்கள், சிங்களவர் விரும்பி உண்ணும் உணவுகளில் பால் சோறும் ஒன்றாகும்.
இதனை பண்டிகை காலங்களில் விஷேசமாக செய்து சாப்பிடுவார்கள்.
அந்தகையில் இன்று பாற்சோறு செய்வது எப்படி என்று இங்கே பார்த்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- அரிசி – 2 கப்
- தேங்காய் – அரை மூடி
உப்பு
செய்முறை
- தேங்காயை அரைத்து 4 கப் பால் எடுத்து கொள்ளவும்.
-
அரிசியை நன்றாக கழுவி ஊறவைத்து கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து சூடேறியவுடன் தேங்காய்ப் பால் உப்பு சேர்த்துக் கொதி வரும் வரை காத்திருக்கவும்.
-
கொதி வந்ததும் அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி 2 விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.
- தட்டில் கொட்டி சதுர வடிவில் வெட்டி சாப்பிடலாம். சுவையை அதிகரிக்க காரமான கட்ட சம்பலுடன் சுவையுங்கள்