மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton ஆகியோருக்கு இடையே கடந்த 30 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது இலங்கை எரிசக்தி துறையில் தற்போதைய நெருக்கடி முகாமைத்துவ திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்..
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அவசர மற்றும் நீண்ட கால திட்டங்கள் குறித்தும் இக்கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைக்கு நியூசிலாந்து எவ்வாறு உதவுவது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.