பெரும்பாலும் மக்கள் பொருள்களை வாங்க சில்லறைகளை விட ரூபாய் நோட்டுகளையே அதிகம் உபயோகித்து வருகின்றனர். எனவே இந்திய ரிசர்வ் வங்கி அதிக பண தாள்களை அச்சிடுவதற்கு செலவு செய்யத் திட்டமிட்டுள்ளது.
2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நாட்டில் அதிகரித்து வரும் கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கத் திட்டமிட்ட மத்திய அரசு, 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்தது. அந்த சமயத்தில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் தாள்களை அச்சிட 2016 -2017ம் ஆண்டில் சுமார் ரூ. 8,000 கோடி வரை செலவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது மக்களின் பணத் தேவையை பூர்த்தி செய்ய 2021-2022ம் ஆண்டில் சுமார் 4,984.8 கோடி ரூபாய் வரை செலவு செய்து, பண தாள்களை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது. நிதியாண்டு 2020-21ல் ரூ. 4,012 கோடி செலவு செய்யப்பட்ட நிலையில், முடிந்த நிதியாண்டில் 24 சதவிகிதம் அதிகம் செலவிடப்பட்டுள்ளது.