WFH முடிஞ்சாச்சு.. நகரத்திற்கு திரும்பும் ஊழியர்கள்.. வாடகை வீடுகளுக்கான டிமாண்டு எகிறியது..!

ஜனவரி – மார்ச் 2022 காலாண்டில் வாடகை வீட்டின் தேவையானது 13 நகரங்களில் 15.8% அதிகரித்துள்ளது.

இதே கடந்த ஆண்டினை காட்டிலும் 6.7% அதிகரித்துள்ளது. எனினும் மேஜிக் பிரிக்ஸ் அறிக்கையின் படி வாடகைக்கு விடப்பட்ட விகிதம் கடந்த காலாண்டினை காட்டிலும் 30.7% அதிகரித்தும், கடந்த ஆண்டினை காட்டிலும் 101.5% அதிகரித்தும் காணப்படுகிறது.

குருகிராம், டெல்லி, நொய்டா, பெங்களூரு மற்றும் அகமதாபாத்தில் உள்ள தேடல் அளவுகள் முறையே 33.5%, 27.8%, 21.4%, 19.4% மற்றும் 17.6% ஆக வளர்ச்சி கண்டுள்ளன.

மார்ச் காலாண்டு முடிவுகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது..!

சென்னையில் என்ன நிலவரம்?

சென்னையில் என்ன நிலவரம்?

சப்ளை அளவில் அதிகபட்சமாக நவி மும்பை, தானே, புனே, மும்பை, சென்னையில் அதிகபட்சமாக 40.9%, 40.9% 38.1%, 37.6% மற்றும் 36.3% அதிகரித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் கட்டுமானத்தின் கீழ் உள்ள சொத்துகள், கட்டுமானம் செய்யப்பட்டு முடிவுக்கு வந்ததன் காரணமாக, வாடகையிலும் ஒரு பெரிய ஏற்றத்தினை கண்டுள்ளது.

தேவை அதிகரிப்பு ஏன்?

தேவை அதிகரிப்பு ஏன்?

மூன்றாவது அலையானது முடிவுக்கு வந்துள்ள நிலையில் முக்கிய நகரங்களில், வாடகை வீடுகளுக்கான தேவையானது அதிகரித்துள்ளது. குறிப்பாக டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மீண்டும் அழைக்க தொடங்கியுள்ளன.

மும்பையில் என்ன நிலவரம்?
 

மும்பையில் என்ன நிலவரம்?

இதற்கிடையில் கடந்த காலாண்டினை காட்டிலும் வாடகை விகிதமானது 4% அதிகரித்துள்ளதாக கணிப்புகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக மும்பையில் 4.5% அதிகரித்துள்ளதாக கணிப்புகள் வெளியாகியுள்ளன.

எந்த வீடு?

எந்த வீடு?

அறிக்கையின் படி, 45% மக்கள் தேர்ந்தெடுக்கும் 2 பெட்ரூம் கொண்ட வீடுகளை தேர்ந்தெடுப்பதாகவும், இதே 31% பேர் 3 பெட்ரூம் அறைகளை கொண்ட வீடுகளையும், 19% பேர் 1 பெட்ரூம் கொண்ட வீட்டினை தேர்தெடுப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் செமி பர்னிச்சிங் செய்யப்பட்ட வீடுகளை 53% பேரும், அபார்ட்மெண்ட்களை 69% பேரும் விரும்புவதாக தரவுகள் மூலம் அறிய முடிகிறது.

 ஏன் தேவை அதிகரிப்பு?

ஏன் தேவை அதிகரிப்பு?

இது குறித்து மேஜிக் பிரிக்ஸின் தலைமை செயல் அதிகாரியான சுதிர் பாய், கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் பல அலுவலகங்களிலும் ஹைபிரிட் மாடல் பணி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் ஊழியர்கள் 2 அல்லது மூன்று நாட்கள் பணிக்கு திரும்பிக் கொண்டுள்ளனர். இதனால் பல ஊழியர்கள் தங்களின் சொந்த ஊர்களில் இருந்து, பெரு நகரங்களுக்கு திரும்ப தொடங்கி விட்டனர். இதன் காரணமாக வாடகை வீடுகளுக்கு தேவையானது அதிகரித்துள்ளது.

கல்வி சேவையும் தொடக்கமும்

கல்வி சேவையும் தொடக்கமும்

மேலும் தற்போது கல்வி நிறுவனங்களும் இயங்கத் தொடங்கி விட்டன. இதன் காரணமாக மாணவர்களும் கல்லூரிகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் திரும்ப தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக வாடகை வீடுகளின் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுவும் வீடு சந்தையானது மேம்படத் காரணமாக அமைந்துள்ளது.

வாடகை நிலவரம்

வாடகை நிலவரம்

முக்கிய நகரங்களில் உள்ள 37% வாடகைதாரர்கள் மாதத்திற்கு 10,000 – 20,000 ரூபாய் வாடகையினையே விரும்புகின்றனர். அதனை தொடர்ந்து 23% பேர் 20000 – 30000 வாடகையினை எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rental housing demand in indian cities grow nearly 16% in march quarter

Demand for rental housing increased by 15.8% in 13 cities during the March 2022 quarter.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.