சமீபத்திய வாரங்களாகவே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 77 ரூபாய்க்கு மேலாக சரிவிலேயே காணப்படுகிறது.
இதே பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பானது இன்னும் மோசமான நிலையில் இருந்து வருகின்றது.
பொருளாதார நிபுணர்கள் இதே நிலை தொடர்ந்தால் பாகிஸ்தான் அடுத்த இலங்கையாக மாறலாம் என எச்சரித்து வருகின்றனர்.
இந்திய விமான பயணிகளுக்கு செம மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
எரிபொருள் விலை கடும் உச்சம்
இலங்கையை போலவே பாகிஸ்தானிலும் விலைவாசியானது கடுமையான உச்சத்தினை எட்டி வருகின்றது. இதற்கிடையில் கடந்த வாரத்தில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையினை பாகிஸ்தான் உயர்த்தியது. மின்சார கட்டணத்தினையும் உயர்த்த திட்ட மிட்டு வருகின்றது. எரிபொருளுக்கான தேவை அதிகம் உள்ள நிலையில், சப்ளையில் பிரச்சனை இருந்து வருகின்றது. இதனால் அங்கு விலைவாசியானது கடும் உச்சத்தினை எட்டியுள்ளது.
கடனுக்கு மறுப்பா?
இலங்கைக்கு கடன் கொடுக்க மறுத்த அண்டை நாடுகள், தற்போது அந்த லிஸ்டில் பாகிஸ்தானையும் சேர்த்துள்ளன. சில தினங்களுக்கு முன்பு சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்க தயாராக உள்ளதாகவும், ஆனால் அதற்கு முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தினை அணுக கூறியதாகவும் கூறப்படுகிறது.
தொடர் சரிவு
இப்படி பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தானில், பொருளாதாரம் ஏற்கனவே பெரும் சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் தான் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு பெரும் சரிவினைக் கண்டுள்ளது நிதி நிலை மோசமடைந்து வரும் நிலையில், சர்வதேச நாணயத்தினை பாகிஸ்தான் எதிர் நோக்கியுள்ளது. ஆனால் இதுவரையில் அங்கும் சுமூக நிலை எட்டப்பட்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் நாணயம் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
பாகிஸ்தான் ரூபாய் சரிவு
மே மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 7% சரிவினைக் கண்டுள்ளது. மார்ச் 2020க்கு பிறகு மிக கடுமையான சரிவினைக் கண்டுள்ளது. எனினும் தொடர்ந்து சரிந்துள்ள பொருளாதாரத்தினை மீட்க போராடி வருகின்றது.
வரவிருக்கும் ஜூன் மாதத்தில் பாகிஸ்தானுக்கு 36 – 37 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியானது தேவைப்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நிதி பற்றாக்குறை
மார்கன் ஸ்டான்லி ஆய்வு நிறுவனம் நடப்பு காலாண்டர் ஆண்டில் 8 பில்லியன் டாலர் வரை நிதி பற்றாக்குறை இருக்கும் என மதிப்பிட்டுள்ளார். வரவிருக்கும் ஆண்டில் பாகிஸ்தானில் நிதி பற்றாக்குறை சரி செய்யப்படலாம். ஆனால் சற்று கடினமானதாகவே இருக்கும். இது மேற்கொண்டு ரூபாயினை சரிவிலேயே வைத்திருக்கும் என ஐஜிஐ செக்யூரிட்டீஸ் லிமிடெட் ஆராய்ச்சி தலைவர் சாத் கான் தெரிவித்துள்ளார்.
Pakistan rupee set to record biggest monthly decline
In May alone, the Pakistan rupee depreciated by 7%. Has seen the sharpest decline since March 2020.