Realme GT Neo 3T: ரியல்மி ஜிடி நியோ 3டி அறிமுக தேதி, எதிர்பார்ப்பு விலை மற்றும் அம்சங்கள்!

Realme GT Neo 3T: ரியல்மி நிறுவனம் தனது புதிய டி சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன், ஜூலை 7 ஆம் தேதி இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை உறுதிபடுத்தும் பதிவை, தனது ட்விட்டர் பக்கத்தில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஜூன் மாதம் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவித்தன. தற்போது NTBC, BIS, 3C சான்றிதழ் பதிவினை ரியல்மி ஜிடி நியோ 3டி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தோனேசியாவில் முதலாவதாக ரியல்மி ஜிடி நியோ 3டி அறிமுகம் செய்யப்படுகிறது.

iQOO Neo 6: விலையில் அற்புதம் நிகழ்த்திய ஐக்யூ நியோ 6 – தாறுமாறு அம்சங்களுடன் அறிமுகம்!

ஐரோப்பா நாடுகளில் முன்னதாக வெளியான ரியல்மி Q5 ப்ரோ (Realme Q5 Pro) ஸ்மார்ட்போனின் மறுபெயரிட்ட பதிப்பு இது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், போன் வெளியாகும் தேதி உறுதியாகி இருப்பதால், என்னென்ன அம்சங்கள் இதில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பயனர்கள் மத்தியில் நிலவி வருகிறது. எனவே, புதிய ரியல்மி போனின் விலை மற்றும் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

Free JioFi Router: புதிய ஜியோ போஸ்ட்பெய்ட் பிளான் – வைஃபை ரவுட்டர் இலவசமாம்!

ரியல்மி ஜிடி நியோ 3டி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

ரியல்மி ஜிடி நியோ 3டி போனில், 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.62″ சாம்சங் E4 அமோலெட் டிஸ்ப்ளே இருக்கலாம். இது Android 12 அடிப்படையிலான ரியல்மி UI 3.0 ஸ்கின் கொண்டு இயங்கும்.

இந்த ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 5ஜி (Qualcomm Snapdragon 870 5G) புராசஸர், 8ஜிபி / 12ஜிபி LPDDR4X ரேம், 128ஜிபி / 256ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் மெமரி வழங்கப்படலாம்.

New Rules from June 1: ஜூன் 1 முதல் தொழில்நுட்பத் துறையில் ஏற்படும் பெரிய மாற்றங்கள்!

ரியல்மி ஜிடி நியோ 3டி போனின் பின்பக்கம், OIS 64MP மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8MP மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2MP மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவை அடங்கிய டிரிப்பிள் கேமரா அமைப்பு இருக்கும்

மேலும், 16MP மெகாபிக்சல் செல்பி கேமரா வழங்கப்படலாம். புளூடூத் 5.2, வைஃபை 6, டைப்-சி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவும் இருக்கும். இரட்டை ஸ்பீக்கர்கள் கொண்ட ஸ்டீரியோ அம்சமும் இதில் அடங்கும்.

இந்த ஸ்மார்ட்போன் 150W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதில் 5,000mAh பேட்டரி வழங்கப்படும். இரண்டு வேரியண்டுகள் மற்றும் மூன்று வண்ணத் தேர்வுகளில் இந்த போன் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Metaverse Rape: தொடாமல் இப்படி செய்ய முடியுமா; மெட்டாவெர்ஸில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை!

ரியல்மி ஜிடி நியோ 3டி விலை (Realme GT Neo 3T Price)

ரியல்மி நிறுவனத்தில் இருந்து வெளிவரும் முதல் டி சீரிஸ் போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதம் இந்த போன் இந்தியாவில் வெளியாகும். இதன் அடிப்படை மாடலில் விலை இந்தியாவில் சுமார் ரூ.29,999 ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.