டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்புச் சரிவு.. மறுபடியுமா..!!

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து 77.67 ஆக உள்ளது கச்சா எண்ணெய் விலை உயர்வால் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை 120 டாலராக உயர்வடைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை 90 சதவீத குறைக்க ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்த காரணத்தால் WTI கச்சா எண்ணெய் 119.1 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 123.5 டாலராகவும் உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு டாலர் மதிப்பில் பெரும் மாற்றத்தைச் செய்துள்ளது.

ரஷ்யாவுக்கு செக் வைத்த EU.. 120 டாலர்களுக்கு மேலாக எகிறிய கச்சா எண்ணெய் விலை.. இனி என்னவாகுமோ?

அமெரிக்க டாலர் - இந்திய ரூபாய்

அமெரிக்க டாலர் – இந்திய ரூபாய்

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணியில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.65 ஆகத் தொடங்கியது, பின்னர் 77.67 ஆகச் சரிந்தது. திங்கட்கிழமை நாணய சந்தை மதிப்பீடு உடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா வீழ்ச்சியைப் பதிவு செய்தது.

 ரூபாயின் மதிப்பு 77.54

ரூபாயின் மதிப்பு 77.54

திங்கட்கிழமை ஆசிய சந்தை மொத்தமும் வளர்ச்சி பாதையில் இருந்த காரணத்தால் முதலீடுகள் அதிகரித்து டாலர் ஆதிக்கம் குறைந்தது. இதனால் நேற்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.54 ஆக இருந்தது.

13 பைசா சரிவு
 

13 பைசா சரிவு

ஆனால் செவ்வாய்க்கிழமை ஆசிய சந்தையில் மந்தமான வர்த்தகம் பதிவு செய்த காரணத்தால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவுடன் துவங்கியது. இதன் வாயிலாகவே 13 பைசா வரையில் சரிந்தது.

ஜிடிபி தரவுகள்

ஜிடிபி தரவுகள்

மேலும் முதலீட்டாளர்கள் இன்று இந்தியாவின் மார்ச் காலாண்டு ஜிடிபி தரவுகள் மற்றும் மாதாந்திர நிதிப்பற்றாக்குறை தரவுகளை மத்திய அரசு வெளியிட உள்ள வேளையில் முதலீட்டு சந்தையை இது பெரிய அளவில் பாதிக்க உள்ளது.

டாலருக்கான தேவை அதிகரிப்பு

டாலருக்கான தேவை அதிகரிப்பு

இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் அன்னிய முதலீடுகள் கணிசமாக வெளியேறிய காரணத்தால் பங்குச்சந்தை சரிவை சந்தித்ததோடு, ரூபாய் மதிப்பு சரிவுக்கு வழிவகுத்தது. சீனாவில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறைந்த வேளையில் ஆசியாவில் பல நாடுகள் வட்டியை உயர்த்த தயாராகியுள்ளது மட்டும் அல்லாமல் விலைவாசி உயர்வால் டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rupee falls 13 Paise to 77.67 Against US Dollar today 31 may 2022

Rupee falls 13 Paise to 77.67 Against US Dollar today 31 may 2022 டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்புச் சரிவு.. மறுபடியுமா..!!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.