ஸ்கை டைவிங்கில் அசத்திய துஷாரா
‛போதையேறி புத்திமாறி, சார்பட்டா பரம்பரை' படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகை துஷாரா விஜயன். தற்போது அன்புள்ள கில்லி, அநீதி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் துஷாரா சுற்றுலாவுக்காக துபாய் சென்றார். அங்கு விமானத்திலிருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் செய்து அசத்தி உள்ளார். இதுபற்றி துஷாரா கூறுகையில், , ‛‛வானில் இருந்து பூமியை பார்ப்பது சொர்க்கத்தை பார்த்த உணர்வை தந்தது. உடல், ஆன்மாவிற்கு புத்துணர்ச்சி கிடைத்தது. என்னுடைய பயிற்சியாளருக்கு நன்றி'' என்றார்.