புதுடெல்லி: ராஜஸ்தானில் 4 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத திருப்பமாக எஸ்செல் குழுமத்தின் தலைவரும், ஜீ குழுமம் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் தலைவருமான சுபாஷ் சந்திரா வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜ ஆதரவோடு அவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இதன் காரணமாக, ஒரு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறுவது கேள்வி குறியாகி உள்ளது. பிரமோத் திவாரியை எதிர்த்து சுபாஷ் சந்திரா களமிறங்கி உள்ளார்.