திருவாரூர் மாவட்டத்தில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரைக்கோட்டை, தண்ணீர்பந்தல் தெருவை சேர்ந்த டேனியல் (வயது 15) மற்றும் அதே பகுதியில் நடேசன் காலனியை சேர்ந்த மகேந்திரன் (வயது 15) இருவரும் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து செருமங்கலத்தில் உள்ள சக்குரியான் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.
அப்பொழுது நீச்சல் தெரியாததால் டேனியல் மற்றும் மகேந்திரன் இருவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதை பார்த்த நண்பர்கள் கரைக்கு சென்று உதவி கேட்டு சத்தம் போட்டதால், அருகிலிருந்தவர்கள் உடனடி குளத்தில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய டேனியல் மற்றும் மகேந்திரன் ஆகிய இரண்டு சிறுவர்களையும் சடலமாக மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சிறுவர்களின் உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.