2012க்கு பின் மோசமான சரிவை பதிவு செய்த நிஃப்டி.. ரீடைல் முதலீட்டாளர்கள் கதறல்..!

மூன்று நாட்கள் தொடர்ந்து உயர்வில் இருந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் U-டர்ன் அடுத்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வர்த்தகம் முடியும் ஒரு மணிநேரத்திற்கு முன்பு மார்ச் காலாண்டில் ஜிடிபி தரவுகள் வெளியாகும் நிலையில் பங்குச்சந்தை பெரும் சரிவை பதிவு செய்தது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்துடன் மே மாத வர்த்தகமும் முடியும் நிலையில் 2012க்குப் பின் மோசமான சரிவை நிஃப்டி இந்த மே மாதத்தில் பதிவு செய்துள்ளது.

1041 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. அசத்தும் டைட்டன் பங்குகள்..!

 செவ்வாய்க்கிழமை வர்த்தகம்

செவ்வாய்க்கிழமை வர்த்தகம்

ஆசிய நாடுகளின் மந்தமான வர்த்தகம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்க கவலைகள், நாணய கொள்கை முடிவுகள், ஆகியவற்றின் எதிரொலியாகவும் ஜிடிபி தரவுகள் எதிர்பார்ப்புக் காரணமாகக் கடைசி ஒரு மணிநேர வர்த்தகத்தில் அதிகளவிலான பங்குகள் சரிந்தது.

சென்செக்ஸ், நிஃப்டி

சென்செக்ஸ், நிஃப்டி

இதன் எதிரொலியாகச் சென்செக்ஸ் 359.33 புள்ளிகள் அதாவது 0.64 சதவீதம் சரிந்து 55,566.41 புள்ளிகள் உடனும், நிஃப்டி குறியீடு 76.85 புள்ளிகள் சரிந்த 16,584.55 புள்ளிகளுடன் முடிவடைந்துள்ளது. இதன் மூலம் நிஃப்டி குறியீடு மே மாதம் 3 சதவீதம் சரிந்து கடந்த 5 மாதத்தில் மோசமான சரிவையும், 2012க்கு பின்பு மிகவும் குறைந்த மாதாந்திர புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

 மே மாதம் மோசம்
 

மே மாதம் மோசம்

ரஷ்யா-உக்ரைன் போரின் துவக்கத்தில் இருந்து அதாவது பிப்ரவரி மாதத்தில் துவங்கி சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டிற்கும் மே மாதம் மிகவும் மோசமானதாக அமையும். மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 257.81 லட்சம் கோடியாகச் சரிந்ததால், பங்கு முதலீட்டாளர்கள் ரூ. 8 லட்சம் கோடிக்கு மேல் முதலீட்டு மதிப்பை இழந்தனர்.

நிதி துறை

நிதி துறை

மே மாதம் அதிகளவில் பாதிக்கப்பட்ட துறை என்றால் நிதி துறை தான், நிஃப்டி வங்கி குறியீடு 3.39 சதவீதம் சரிந்தது. இதில் கோடாக் மஹிந்திரா வங்கி 3.48 சதவீதம் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

நிஃப்டி குறியீட்டில் சன் பார்மா, ஹெச்டிஎப்சி, ரிலையன்ஸ், ஸ்ரீசிமெண்ட் பங்குகள் அதிகளவிலான சரிவை பதிவு செய்தது. ONGC, NTPC, மஹிந்திரா & மஹிந்திரா, கோல் இந்தியா, டாடா கன்ஸ்யூமர் பங்குகள் உயர்வுடன் முடிந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Nifty logs worst May since 2012 fall by 3 percent

Nifty logs worst May since 2012 fall by 3 percent 2012க்குப் பின் மோசமான சரிவை பதிவு செய்த நிஃப்டி.. ரீடைல் முதலீட்டாளர்கள் கதறல்..!

Story first published: Tuesday, May 31, 2022, 20:41 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.