டெக்சாஸ் பாடசாலை படுகொலையை அடுத்து கனடாவில் கைத்துப்பாக்கி தடைக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்தது தற்போது கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் பாடசாலைக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் முன்னெடுத்ததில் 19 மாணவ மாணவியர் கொல்லப்பட்டுள்ளதுடன் இரண்டு ஆசிரியைகளும் பரிதாபமாக பலியாகினர்.
இந்த நிலையில் கனடாவில் கைத்துப்பாக்கிகளுக்கு நாடு முழுவதும் தடைவிதிக்க கோரும் முக்கிய சட்டம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த விவகாரம் தொடர்பில் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
ஆனால் தற்போது குறித்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதுடன், புதிய சட்டத்தால் எந்த பயனும் இல்லை எனவும் விமர்சித்துள்ளனர்.
கனடாவில் புழக்கத்தில் இருக்கும் துப்பாக்கிகள் ஏற்கனவே சட்டவிரோதமானவை என்பதால் பிரதமரின் புதிய முன்மொழியப்பட்ட தடை குடிமக்களைப் பாதுகாக்க எதுவும் செய்யாது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மேலும், தேசிய அளவில் தடை என்பது குற்ற பின்னணியின் மூல காரணத்தை பாதிக்காது என்றே கூறுகின்றனர்.
குற்றவாளிகளால் கனடாவுக்குள் துப்பாக்கிகள் இரகசியமாக கடத்தி வரப்படுவதாக கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், 7 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தும் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்காமக் பிரதமர் தற்போதும் வெறும் விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்றார்.
மேலும், கனடாவில் அரசாங்க ரீதியாக துப்பாக்கி வைத்திருப்போரை அடையாளம் காணும் எந்த திட்டமும் இல்லை எனவும்,
இதனால் அமெரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட்ட சட்டவிரோத துப்பாக்கிகளின் எண்ணிக்கை தொடர்பில் உறுதியான தகவல் கிடைப்பது சிக்கல் எனவும் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் 1,500 க்கும் மேற்பட்ட மாதிரிகள் மற்றும் தாக்குதல் பாணி துப்பாக்கிகளின் வகைகள் தடைசெய்யப்பட்டவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தெருக்களில் இருந்து எடுக்கப்பட்ட கைத்துப்பாக்கிகளில் 85 சதவிகிதம் அமெரிக்காவை விரல் நீட்டுவதாக 2020 ல் ரொறன்ரோ காவல்துறை தெரிவித்துள்ளது.
2021-2022ல் கனேடிய எல்லை ரோந்துப்படையினர் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தடை செய்யப்படாத 955 துப்பாக்கிகளை கைப்பறியுள்ளனர்.