தற்போது நடைபெறும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வெள்ளம் உட்பட இயற்கை அனர்த்தங்களினால் உரிய பரீட்சை மண்டபங்களுக்கு செல்ல முடியாவிட்டால் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களுக்குச் சென்று பரீட்சை எழுதுவதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்சமயம் நிலவும் அடைமழையினால் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பரீட்சார்த்திகள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளமையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்ககப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்சமயம் நிலவும் காலநிலையினால் சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் அதற்கான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது