மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் 2 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்றனர்.
மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் 3,500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவு பணியாளர்கள் கடந்த இரு தினங்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் ‘தினக்கூலி தொழிலாளர்கள் பணி நிரந்தரப்படுத்த வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7 வது ஊதியக் குழு பணப் பலன்களை வழங்க வேண்டும், 2006ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கொரோனா நிவாரண தொகை 15 ஆயிரம் வழங்க வேண்டும்’ உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க… பிரெஞ்சு ஓபன்: அனல் பறந்த களிமண் களம் – ஜோகோவிச்சை கெத்தாக வீழ்த்திய நடால்
வேலை நிறுத்தம் காரணமாக, மதுரையில் நடைபெற்ற போராட்டத்தால் மாநகராட்சி முழுவதும் குப்பைகள் தேங்கின. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில், வேலை நிறுத்தம் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை, மாநகராட்சி சிறப்பு குழு மற்றும் மேயர் என நடைபெற்ற 5-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தூய்மப் பணியாளர்கள் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM