அடேய் அப்ரண்டிஸ் டாக்டர், பெண் வயிற்றுக்குள்ள இதெல்லாமாடா வைத்து தைப்பீங்க…? அலட்சியத்தால் 7 மாதமாக அவதி..!

காட்டுமன்னார் கோவிலில் ஏ.கே.செந்தில்குமார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றில் துணி,நூல், இரும்புத்துண்டு மற்றும் ஊசி உள்ளிட்டவற்றை வைத்து தைத்துவிட்டதாக, 7 மாதமாக வலியால் அவதிக்குள்ளான அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மாதர் சூடாமணி கிராமத்தை சேர்ந்த 36 வயது பெண் கலைச்செல்வி. இவருக்கு திருமணமாகி கணவர் பிரிந்து சென்ற நிலையில்
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கர்ப்பப்பை கோளாறு சம்பந்தமாக சிதம்பரம் சாலையில் காட்டுமன்னார் கோவிலில் இயங்கும் ஏ.கே.செந்தில் குமார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர் செந்தில் குமார் கர்ப்பப் பையில் நீர் கட்டி இருப்பதாகவும் அதை அகற்ற வேண்டும் எனவும் கூறி உள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் கலைச்செல்விக்கு அடிக்கடி வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்ற போது மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் கலைச்செல்வி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவரின் வயிற்று பகுதியில் ஸ்கேன் செய்து பார்த்தபோது அந்தப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சைக்கு பயன் படுத்தப்படும் துணி, நூல், இரும்பு துண்டு மற்றும் ஊசி ஆகியவை உள்ளே வைத்து தைக்கப்பட்டு இருப்பதாக ஸ்கேன் அறிக்கையில் தெரிவந்ததால் 7 மாதமாக வலியால் துடித்த கலைச்செல்வி
அதிர்ச்சி அடைந்தார்.

தனக்கு அலட்சியத்துடனும் கவனக்குறைவாகவும் அறுவை சிகிச்சை செய்த காட்டுமன்னார்கோவில் ஏ.கே.செந்தில்குமார் மருத்துவமனையில் முறையிட்ட போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகின்றது.

அதனைத்தொடர்ந்து கலைச்செல்வி காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்தில் ஏ.கே. செந்தில்குமார் மருந்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது உறவினர்களுடன் சென்று புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.