Drink more tea side effects in tamil: உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒரு ரிஃப்ரெஷிங் பானமாக டீ உள்ளது. சில நாடுகளில் காபிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், டீ (தேநீர்) தான் உண்மையில் உலகம் முழுவதும் பரவலாக நுகரப்படும் ஒரு மலிவு விலை பானமாக இருக்கிறது.
இந்த அற்புத பானத்தை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளின் விரிவான பட்டியலை பல ஆய்வுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இதில் வீக்கம் குறைத்தல், இதய நோய் மற்றும் நாட்பட்ட நோய்களை கட்டுப்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவுகளை பராமரிப்பது உள்ளிட்டவை சிலவைகள் ஆகும்.
டீ மனதை ஆறுதல் படுத்துவதற்கும் மற்றும் குணப்படுத்துவதற்கான ஒரு பிரபலமான தேர்வாக இருந்தாலும், இதன் அதிகபடியாக நுகர்வு சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
டீ நாள் ஒன்றுக்கு, ஒன்று அல்லது இரண்டு கப்க்கு அதிகமாக குடிப்பது, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு கோப்பைகளுக்கு மேல் குடிப்பவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
தூக்கமின்மை
ஒருவர் அளவுக்கு அதிகமாக டீ குடிப்பதால் அவருக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது. போதுமான தூக்கம் வரவில்லை என்றால், நீங்கள் அனைத்து வகையான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். அத்தகைய நிலையைத் தவிர்க்க, டீ குடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும். ஒரு நாளைக்கு 2 கப் டீ (தேநீர்) பருகினால் போதும் என்று பல அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
பதற்றம் அமைதியின்மை ஏற்படும்
அதிகமாக டீ குடிப்பது கவலையை அதிகரிக்கும். தேநீரிலும் காஃபின் உள்ளது. அதிகப்படியான காபின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. அத்தகைய சூழலில், நீங்கள் இந்த பழக்கத்தை படிப்படியாக மாற்ற வேண்டும். மேலும் கவன சிதறல், அமைதியில்லாமல் போவது, நிலையில்லாமல் மனம் அலை பாய்ந்துக்கொண்டே இருப்பது போன்ற பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது.
ரத்த சோகை அல்லது அனீமியா
டீ அதிக அளவில் குடித்தால் ரத்த சோகை ஏற்படலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதிலுள்ள டானிஸ் என்ற வேதிப்பொருள், உடலில் இரும்புச்சத்து சேராமல் தடுக்கும் தன்மை கொண்டது என்பதால், இவ்வாறு கூறுகின்றனர். மேலும் டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்பட வாய்ப்புள்ளது எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
குடலுக்கும் நல்லதல்ல
அதிகமாக தேநீர் குடிப்பது குடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. இது உங்கள் குடலை சேதப்படுத்தும். இது உணவை ஜீரணிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், நெஞ்சு எரிச்சல் பிரச்சனை மேலும் அதிகரிக்கிறது.