‘பங்குச்சந்தை வர்த்தகத்தில் இது ரொம்ப முக்கியம்”: ஒரு இல்லத்தரசி இமயம் தொட்ட கதை!

மும்பையைச் சேர்ந்த ஒரு இல்லத்தரசி பங்குச்சந்தைகளில் இமயம் தொட்ட நிலையில் பங்கு சந்தையில் எது முக்கியம் என்பதை விளக்கியுள்ளார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான மும்பையை சேர்ந்த முக்தா தமங்கர் என்பவர் தனது பங்குச்சந்தை அனுபவத்தை அனைவருக்கும் பகிர்ந்துள்ளார்.

தனது குடும்பத்தில் முதல் நபராக பங்குச்சந்தையில் ஈடுபட்டதை அடுத்து பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு முன் என்ன செய்ய செய்தார் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

7 வருடமாக சேர்த்தது வெறும் 8 மாதத்தில் பறிபோனது: இந்திய பங்குச்சந்தை..!

 அமெரிக்க பொருளாதாரம்

அமெரிக்க பொருளாதாரம்

கடந்த 2008ஆம் ஆண்டு அமெரிக்க பொருளாதாரம் நெருக்கடியான சூழலில் இருந்த போது உலகம் முழுவதும் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்தது. இந்தியாவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர். இதுகுறித்த செய்தி பரபரப்பாக வெளிவந்து கொண்டிருந்த போதுதான் மும்பையை சேர்ந்த முக்தா தமங்கர் என்ற இல்லத்தரசி பங்குச்சந்தை என்றால் என்ன? என்பதை கற்க ஆரம்பித்தார்.

முக்தா தமங்கர்

முக்தா தமங்கர்

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான முக்தா தமங்கர், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவு தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். அதன்பிறகு குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டவுடன் மீதமிருக்கும் 6 மணி நேரங்களில் பங்குச்சந்தை என்றால் என்ன? என்பதை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். இரவில் இதுகுறித்து ஆய்வு செய்தார்.

பொறுமை
 

பொறுமை

பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் முன் ஒழுக்கம். சகிப்புத்தன்மை. விடாமுயற்சி மற்றும் பொறுமை ஆகியவை முக்கியம் என்பதை அவர் ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டார். அவருடைய கணவர் மற்றும் மாமியார் ஆகிய இருவருமே அவருக்கு நம்பிக்கை அளித்தனர்.

சிறிய இலக்கு

சிறிய இலக்கு

வர்த்தகத்தின் மூலம் வருமானம் ஈட்டுவது தனக்கு புதிது என்பதால் முதலில் பெரிய தொகையை ரிஸ்க் எடுக்காமல் 2000, 3000 ரூபாய் வரை சிறிய இலக்குடன் வர்த்தகம் செய்ய தொடங்கினார். ஏதாவது ஒரு நாளில் 5000 ரூபாய் வரை வருமானம் கிடைத்து விட்டால் உடனே அவர் வர்த்தகத்தை முடித்து விட்டு வேறு வேலையை பார்க்கச் சென்றுவிடுவார்.

பங்குச்சந்தையில் ஒழுக்கம், பொறுமை நிச்சயம் தேவை என்றும் இவை இரண்டும் இல்லாதவர்கள் தயவு செய்து பங்குச் சந்தையில் நுழைந்து தங்கள் பணத்தை இழக்க வேண்டாம் என்று அவர் கூறி உள்ளார். முறையான மாத முதலீட்டு திட்டம், அரசாங்க பத்திரங்கள், தங்கம் சார்ந்த வர்த்தகங்கள், தேசிய ஓய்வூதியத் திட்டம் போன்ற அரசு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், பங்குச்சந்தையில் நீண்ட காலத்தில் லாபம் பெறலாம் என்று முடிவு செய்தார்.

 

நீண்டகால முதலீடு

நீண்டகால முதலீடு

நீண்ட கால முதலீட்டுக்கான சிறந்த பங்குகளை தேர்வு செய்து, அந்த பங்குகளை ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக வாங்கினார். ஒரு பங்கை சரியான நேரத்தில் வாங்க வேண்டும், சரியான நேரத்தில் அந்த பங்கை விற்றுவிட்டு வெளியே வர வேண்டும் என்பதை தனது அனுபவத்தில் தெரிந்து கொண்டார்.

இமயம்

இமயம்

பங்கு சந்தையில் தற்போது 10 ஆண்டு அனுபவம் உள்ள முக்தா தமங்கர், வர்த்தகத்தில் இமயம் தொட்டுள்ளார். இதனை அடுத்து அவர் தனது குழந்தைகளுக்கும் பங்குச் சந்தை குறித்த அறிவை கற்றுக்கொடுக்கிறார். இந்தியாவில் நிதி சம்பந்தமான கல்வி அறிவு மிகவும் குறைவு என்றும், அதனால் எனது அனுபவத்தை எனது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கின்றேன் என்றும் அவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக் கொள்கிறார்கள் என்றும் நான் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யும் போது அவர்களும் தன்னுடன் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் தற்போது அவர்களே பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்றும் அவர் பெருமையுடன் தெரிவித்தார்.

கற்றுக்கொடுக்க தயார்

கற்றுக்கொடுக்க தயார்

மேலும் பங்குச்சந்தை குறித்து கற்றுக்கொள்ளும் உண்மையானஆர்வம் இருப்பவர்களுக்கு நான் இலவசமாக கற்றுத் தர தயாராக இருக்கிறேன் என்றும் பொறுமை மற்றும் ஆர்வம் இருந்தால் மட்டும் தன்னை அணுகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

எடுத்துக்காட்டு

எடுத்துக்காட்டு

பங்குச்சந்தை என்றால் என்ன என்று தெரியாமல் இருந்த முக்தா தமங்கர், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை பங்குச் சந்தை குறித்த முழுமையான ஆய்வில் ஈடுபட்டு, அதன் பிறகு பங்கு சந்தையில் நுழைந்து, படிப்படியாக வர்த்தகம் செய்து, தோல்வியை அனுபவமாகவும், வெற்றியை பாடமாகவும் எடுத்து கொண்ட முக்தா தமங்கர் பங்குச்சந்தை நிபுணராக மாறியுள்ளார். இவரை ஒரு எடுத்துக்காட்டாக பங்குச் சந்தையில் புதிதாக நுழைய இருப்பவர்களும், ஏற்கனவே பங்குச்சந்தையில் இருப்பவர்களும் எடுத்து கொள்ள வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mumbai-based housewife turned stock trader shares her success mantra

Mumbai-based housewife turned stock trader shares her success mantra |’பங்குச்சந்தை வர்த்தகத்தில் இது ரொம்ப முக்கியம்”: ஒரு இல்லத்தரசி இமயம் தொட்ட கதை!

Story first published: Wednesday, June 1, 2022, 7:42 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.