இன்று முதல் டெபாசிட்டுக்களுக்கான வட்டியை உயர்த்தியது சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்: எவ்வளவு தெரியுமா?

சென்னையை சேர்ந்த சுந்தரம் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் புதிய வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.

ஜூன் 1 முதல் அதாவது இன்று முதல் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்து உள்ளதாகவும் அது குறித்த விவரங்களையும் அறிவித்துள்ளது.

சுந்தரம் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் டெபாசிட் செய்பவர்கள் இந்த புதிய வட்டி விகிதத்தை அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வொர்க் ஃப்ரம் ஹோம்-க்கு எந்தெந்த நகரங்கள் பெஸ்ட்?

 சுந்தரம் ஹோம் பைனான்ஸ்

சுந்தரம் ஹோம் பைனான்ஸ்

சென்னையை சேர்ந்த சுந்தரம் பைனான்ஸ் லிமிடெட் ஒரு இந்திய நிதி மற்றும் முதலீட்டு சேவை வழங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் கிரெடிட் கார்டு, வணிக கடன், முதலீட்டு வங்கி உள்ளிட்ட ஒருசில நிதி சேவைகளை வழங்குகிறது. கடந்த 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு பெற்ற நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் மூலதனம் 26,000 கோடி. நாடு முழுவதும் 640 கிளைகள் கொண்டுள்ளது.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

இந்த நிலையில் சுந்தரம் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் தனிநபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் மூத்த குடிமக்களின் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதங்களை ஜூன் 1 முதல் திருத்தம் செய்துள்ளது. அதுகுறித்து தற்போது பார்ப்போம்.

டெபாசிட்
 

டெபாசிட்

தனிநபர்களுக்கான இரண்டு ஆண்டு டெபாசிட்டுகளுக்கான விகிதம் இதற்கு முன் 5.65 சதவீதம் என இருந்த நிலையில் இன்று முதல் அது 5.90 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கான டெபாசிட்களுக்கு 5.80 சதவீதம் என இருந்த நிலையில் இன்று முதல் 6.05 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அறக்கட்டளை

அறக்கட்டளை

அறக்கட்டளைகளின் மூன்று வருட டெபாசிட்டுகளில் ஆண்டுக்கு 6.55 சதவீதத்தை செலுத்துவதாக தெரிவித்துள்ள சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட், இரண்டு வருட கால டெபாசிட்டுகளுக்கு, 5.65 சதவீதத்தில் இருந்து 5.90 சதவீதமாகவும், நான்கு மற்றும் ஐந்து வருட டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் முந்தைய 6.30 சதவீதத்தில் இருந்து 6.55 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

 மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள்

அதேபோல் மூத்த குடிமக்களுக்கு இரண்டு வருட டெபாசிட்களுக்கு 6.15 சதவீதத்திலிருந்து 6.40 சதவீதமும், மூன்று முதல் ஐந்து வருட டெபாசிட்களுக்கு முந்தைய 6.30 சதவீதத்திலிருந்து 6.55 சதவீதமும் வழங்கப்படும் என்றும் சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 12 மாத கால டெபாசிட்களில், தனிநபர்கள், அறக்கட்டளைகளுக்கு ஆண்டுக்கு 5.50 சதவீதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 6 சதவீதம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாபம்

லாபம்

2022 நிதியாண்டில், டெபாசிட் மூலம் பெற்ற தொகையான ரூ.131 கோடியுடன் ரூ.1,941 கோடியாக டெபாசிட் அதிகரித்துள்ளதாகவும், மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனம் ரூ. 168 கோடி லாபம் பெற்றுள்ளதாகவும் நிதியாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sundaram Home Finance revises interest rates on deposits

Sundaram Home Finance revises interest rates on deposits | இன்று முதல் டெபாசிட்டுக்களுக்கான வட்டியை உயர்த்தியது சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்: எவ்வளவு தெரியுமா?

Story first published: Wednesday, June 1, 2022, 8:18 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.