புகை பிடிப்பவர்களால் இந்தியாவுக்கு 766 மில்லியன் டாலர் செலவு: WHO தகவல்

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு 766 மில்லியன் டாலர் செலவு என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

புகையிலையின் கெடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் புகையிலை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

குறிப்பாக இந்தியாவில் புகையிலை விற்பனை கடந்த சில ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

புகையிலை குப்பை

இந்த நிலையில் குப்பையில் கொட்டப்படும் புகையிலை கழிவு பொருட்களை சுத்தப்படுத்துவதால் ஏற்படும் செலவு இந்தியாவுக்கு 766 மில்லியன் அமெரிக்க டாலர் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. புகைபிடிப்பவர்கள் செய்யும் தவறால் பொருளாதார தாக்கம், வரி செலுத்துவோர் மீது விழுகிறது என்றும், இது மற்ற தொழில் துறையை சிக்கலாக்கி உள்ளது என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

புகையிலை எதிர்ப்பு தினம்

புகையிலை எதிர்ப்பு தினம்

உலக சுகாதார மையம் இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை குறிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் புகையிலை பயன்படுத்துவதால் 8 மில்லியனுக்கும் அதிகமான மனித உயிர்கள் பலியாகின்றன என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

புகையிலையால் மாசு
 

புகையிலையால் மாசு

மேலும் புகையிலையால் 600 மில்லியன் மரங்கள், 2 லட்சம் ஹெக்டேர் நிலங்கள், 22 பில்லியன் டன் தண்ணீர் மற்றும் 84 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு ஆகியவைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
மனித ஆரோக்கியத்தை பெருமளவு சேதப்படுத்தும் புகையிலை, தாவரங்கள் விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

செலவு

செலவு

சிகரெட், புகையில்லா புகையிலை பொருட்கள் மற்றும் இ- சிகரெட் போன்ற பொருட்களின் கழிவுகள் அரசின் நிதிநிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்றும் உலக அளவில் சிகரெட் குப்பையை சுத்தப்படுத்துவதற்கு ஒவ்வொரு நாடும் பல மில்லியன் டாலர்களை செலவு செய்கிறது என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

சீனா-இந்தியா

சீனா-இந்தியா

உலகிலேயே அதிகபட்சமாக சீனா புகையிலை பொருட்களை சுத்தப்படுத்துவதற்காக 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்கிறது என்றும் அதற்கு அடுத்தபடியாக இந்தியா சுமார் 766 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்கிறது என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

சுத்தம்

சுத்தம்

இந்தியா தனது நாட்டிலுள்ள மொத்த குப்பைகளை சுத்தம் செய்வதற்கு செய்யும் செலவில் 10% புகையிலைப் பொருட்களை சுத்தம் செய்வதற்காக செலவு செய்கிறது என்று ஒரு புள்ளி விபரத்தை உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து புகையிலையை பயன்படுத்துபவர்களிடம் அதனால் ஏற்படும் மாசுக்களை சுத்தப்படுத்துவதற்கான கட்டணத்தை வசூல் செய்ய வேண்டுமென்ற நடவடிக்கையை அனைத்து நாடுகளும் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 சிக்கல்

சிக்கல்

புகையிலை பொருட்களை சுத்தப்படுத்துவதற்கு என்று பல மில்லியன் டாலர் செலவு செய்வதால் அரசுக்கு செலுத்தப்படும் வரியில் ஒரு பெரும்பகுதி வீணாகிறது. இதனால் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், தொழில்துறையை முன்னேற்றுவதற்கு தேவையான திட்டங்கள் அமைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

கடல் - ஆறு

கடல் – ஆறு

அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் 4.5 பில்லியன் சிகரெட் குப்பைகள் கடல்கள், ஆறுகள், ஆகியவற்றில் கலப்பதால் பெரும் மாசு ஏற்படுகிறது என்றும் இதற்காக அனைத்து நாடுகளும் இணைந்து தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Cleaning up littered tobacco products costs India about 766 million dollars each year: WHO

Cleaning up littered tobacco products costs India about 766 million dollars each year: WHO | புகை பிடிப்பவர்களால் இந்தியாவுக்கு 766 மில்லியன் டாலர் செலவு: WHO தகவல்

Story first published: Wednesday, June 1, 2022, 9:32 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.