Tamil News Live Update: இந்தியாவில் மேலும் 2,745 பேருக்கு கொரோனா

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24  காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

பத்திரப்பதிவுத் துறையில் புதிய முயற்சி!

பத்திரப்பதிவுத் துறையில் புதிய முயற்சியாக அவசர முன்பதிவுக்கு ரூ. 5,000 கட்டணமாக நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக அதிக ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும். அவசர கால ஆவணப் பதிவிற்கான முன்பதிவு தட்கல் முறையில் வழங்கும் முறையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விடைத்தாள்களை திருத்தும் பணி!

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9ஆம் தேதி தொடங்குகிறது. 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 83 மையங்களிலும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 86 மையங்களிலும் திருத்தப்படுகிறது.  

Tamil News Latest Updates

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி, மாநில அரசுக்கு எதிராக பாஜகவினர் நேற்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில், உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 5,000 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
11:02 (IST) 1 Jun 2022
கல்வி மாநாடு.. தமிழக அரசு புறக்கணிப்பு!

குஜராத்தில் நடைபெறும் 2 நாட்கள் கல்வி மாநாட்டில் பங்கேற்காமல் தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது. புதியக் கல்விக் கொள்கை குறித்து கல்வி மாநாட்டில் விவாதம் நடைபெறுவதால் புறக்கணிப்பதாக கூறப்பட்டுள்ளது.

10:50 (IST) 1 Jun 2022
மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு!

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு, ஏப்ரல் 15ஆம் தேதி நிலவரப்படி 22ஆக இருந்த பாதிப்பு, தற்போது 100ஆக பதிவாகி வருகிறது. எனவே நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

10:19 (IST) 1 Jun 2022
சென்னையில் கொரோனா தொற்று அதிகரிப்பு – ராதாகிருஷ்ணன் கடிதம்

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம். ஏப்ரல் 15ஆம் தேதி நிலவரப்படி 22ஆக இருந்த பாதிப்பு, தற்போது 100ஆக பதிவாகி வருகிறது

10:12 (IST) 1 Jun 2022
அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை – முதல்வர் ஆலோசனை

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து 19 துறைகளின் செயலாளர்கள் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

10:08 (IST) 1 Jun 2022
இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ280 குறைந்து ரூ37,920க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ35 குறைந்து, ரூ4,470க்கு விற்பனையாகிறது.

10:04 (IST) 1 Jun 2022
நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுவதா? – ஓபிஎஸ்

நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு கர்நாடக மாநில அரசு முட்டுக்கட்டை போடுகிறது. நதநீர் இணைப்புத் திட்டத்தின் திட்ட அறிக்கைக்கு அனுமதி பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்தவும் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை

09:56 (IST) 1 Jun 2022
இந்தியாவில் மேலும் 2,745 பேருக்கு கொரோனா

இந்தியாவில் மேலும் 2,745 பேருக்கு கொரோனா பாதிப்பு. 6 பேர் உயிரிழப்பு , கொரோனாவில் இருந்து 2,236 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 18,386 பேர் சிகிச்சையில் உள்ளனர்

09:31 (IST) 1 Jun 2022
13 வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை!

தமிழ்நாட்டிற்கான மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்காக தாக்கலான 13 வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெற உள்ளது. 6 பேரின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டால், போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது.

09:30 (IST) 1 Jun 2022
தக்காளி விலை குறைந்தது!

சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை ரூ. 20 குறைந்து ரூ.50க்கு விற்பனையாகிறது.

09:30 (IST) 1 Jun 2022
சசிகலா பாஜகவில் இணைந்தால் வரவேற்போம்!

சசிகலா பாஜகவில் இணைந்தால் வரவேற்போம்; அது பாஜக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என புதுக்கோட்டையில் சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.

08:33 (IST) 1 Jun 2022
வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.135 குறைவு!

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.135 குறைந்து ரூ.2,373க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.

08:28 (IST) 1 Jun 2022
அதி நவீன ஏவுகணை!

இலக்கை துல்லியமாக தாக்கும் அதி நவீன ஏவுகணையை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்க உள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல் தெரிவித்துள்ளார்.

08:27 (IST) 1 Jun 2022
பிரபல பின்னணி பாடகர் மரணம்!

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தாவில் மாரடைப்பால் இன்று காலமானார். தமிழில் கில்லி, அந்நியன், காக்க காக்க, 7ஜி ரெயின்போ காலனி உட்பட ஏராளமான படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.

08:27 (IST) 1 Jun 2022
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

அரசின் திட்டங்கள் மற்றும் சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். 2 நாட்கள் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அனைத்துத்துறை செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

08:24 (IST) 1 Jun 2022
சென்னை பல்கலை, இல் கொரோனா!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

08:24 (IST) 1 Jun 2022
மன நிறைவு மற்றும் மகிழ்ச்சி.. மு.க.ஸ்டாலின்!

டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது மன நிறைவு மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது. நீர் நிலை தூர்வாரும் பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது. மகசூலை பெருக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. காவிரி நீரை முறையாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும். தமிழகம் தற்போது அமைதிப் பூங்காவாக இருக்கிறது. கலவரம், சாதி, மத மோதல், துப்பாக்கிச்சூடு தற்போது இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

08:23 (IST) 1 Jun 2022
ஆசிய கோப்பை ஹாக்கி!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது. சூப்பர் 4 பிரிவில் தென் கொரிய அணிக்கு எதிரான போட்டி 4க்கு 4 என்ற கோல் கணக்கில் டிரா ஆனதால் இந்தியாவிற்கு ஏமாற்றமானது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.