பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் பல்வேறு வகைகள் உள்ளது என்பது பங்குச்சந்தையில் ஈடுபட்டு வரும் அனைவரும் அறிந்ததே.
ஈக்விட்டி சந்தையில் தினந்தோறும் டிரேடிங் செய்பவர்கள், நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்பவர்கள் உண்டு.
அதேபோல் கமாடிட்டி சந்தையில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை டிரேடிங் செய்பவர்கள், கரன்சி டிரேடிங் செய்பவர்கள் மற்றும் மியூச்சுவல் பண்ட் உள்ளிட்ட டிரேடிங் முறைகளும் இந்திய பங்குச்சந்தையில் உண்டு.
இ-முத்ரா ஐபிஓ: பங்குகளை வாங்கலாமா? கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்!
ஐபிஓ
அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக ஐபிஓவில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. பல முன்னணி நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு முதலீடு திரட்டி, தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அந்த பணத்தை பயன்படுத்திக் கொள்கின்றன. பொதுமக்களுக்கும் ஐபிஓவில் முதலீடு செய்வதில் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை சமீபத்தில் வெளியான எல்ஐசி ஐபிஓவை போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்ததில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
செபி
இந்த நிலையில் உண்மையான நிறுவனங்கள் மட்டும் ஐபிஓவில் பங்கேற்பதை உறுதி செய்யவும், போலி நிறுவனங்களை தவிர்க்கும் வகையிலும் செபி என்று கூறப்படும் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிகள் இந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் அனைத்து ஐபிஓவுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.
சுற்றறிக்கை
இது குறித்து செபி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ஐந்து முக்கிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
1) ASBA (Application Supported by Blocked Amount) நிறுத்தி வைக்கப்பட்ட தொகை விண்ணப்பம் என்பது, பொது வெளியீடுகளில் உள்ள விண்ணப்பங்கள் முதலீட்டாளரின் வங்கிக் கணக்குகளில் விண்ணப்பப் பணம் நிறுத்தி வைத்த பின்னரே செயல்படுத்தப்படும்.
2) பங்கு பரிவர்த்தனைகள் ASBA விண்ணப்பங்களை தங்கள் மின்னணு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட விண்ணப்ப தொகை கட்டாயமாக உறுதி செய்யப்பட்டவுடன் ஏற்றுக்கொள்ளும். இது அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3) சில்லறை விற்பனை, தகுதிவாய்ந்த நிறுவனத்தின் ஐபிஓ வாங்குவோர், நிறுவனம் சாராத முதலீட்டாளர்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட பிற பிரிவுகள், விண்ணப்பங்கள் ஆகியவை செயலாக்கப்படும்.
4) இந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பங்குதாரர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வணிக வங்கியாளர்கள் இதுகுறித்து அனைத்து பங்குதாரர்களுடனும் ஒருங்கிணைக்க வேண்டும்.
5) 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதிக்கு பின்னர் திறக்கப்படும் அனைத்து ஐபிஓக்களுக்கு இந்த சுற்றறிக்கை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
காத்திருக்கும் ஐபிஓக்கள்
விரைவில் ஐபிஓ வெளியிட திட்டமிட்டிருக்கும் ட்ரூம், எபிக்ஸ், ஜெமினி எடிபில் எண்டு பேட்ஸ், ஃபைவ் ஸ்டார் பிஸ்னஸ் ஃபைனான்ஸ், டிவிஎஸ் சப்ளை செயின் சொலியூசன், மேக்லியோட்ஸ் பார்மா, நவி டெக்னாலஜீஸ், ஜோய் ஆலுக்காஸ், ஃபேப் இந்தியா , ஆதார் ஹவுசிங் ஃபைனான்ஸ், கோ ஏர்லைன்ஸ், பார்ம்ஈசி, ஓரவெல் ஸ்டெயிஸ் ஆகிய நிறுவனங்கள் புதிய ஐபிஓ விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
IPO application rules tweaked. 5 things you should know
IPO application rules tweaked. 5 things you should know | ஐபிஓவில் முதலீடு செய்ய போகிறீர்களா? 5 புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!