India says it will keep buying “cheap” Russian oil, arguing a sudden stop would drive up costs for its people: உலகில் சக்தி வாய்ந்த நாடுகளுள் ஒன்றாக வலம் வரும் ரஷ்யா அதன் அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி படையெடுத்து போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைன் பெரும் சேதத்தையும், உயிரிழப்பையும் சந்தித்துள்ளது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஐ.நாவில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் ரஷ்யாவின் செயலை கண்டித்து, அந்நாட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.
இதனைத்தொடர்ந்து, உலகில் உள்ள வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்தன. ஐ.நா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய பிரதிநிதி வாக்களிக்கவில்லை. இதேபோல், இந்தியா மற்ற நாடுகளை போல் ரஷ்யாவை கடுமையாக சாடவில்லை. அது அந்த இருநாடுகளின் விவகாரம் என இன்று வரை யாருக்கும் எதிராகவும், சாதகமாகவும் கருத்து தெரிவிக்காமல், நடுநிலையை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு மற்றும் உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா கடந்த சுமார் 34 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் கடல்வழி எண்ணெய் இறக்குமதியின் அளவுகள் CPC கலப்பு எண்ணெயை விலக்குகின்றன. இது ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகம் வழியாகவும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் கஜகஸ்தானின் மேற்கத்திய நாடுகளின் துணை நிறுவனங்களால் போக்குவரத்து அளவுகளாக வழங்கப்படுகிறது.
ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிகள் பிப்ரவரி முதல் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யா இறக்குமதிக் கட்டணத்தைக் குறைத்து தள்ளுபடி விலையில் இந்தியாவிற்கு எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்தியா இந்த மாதம் 24 மில்லியனுக்கும் அதிகமான பேரல்கள் ரஷ்ய கச்சாவைப் பெற்றது. இது ஏப்ரல் மாதத்தில் 7.2 மில்லியன் பேரல்கள் மற்றும் மார்ச் மாதத்தில் சுமார் 3 மில்லியனாக இருந்தது. ஜூன் மாதத்தில் இது மேலும் சுமார் 28 மில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ரஷ்யாவிடமிருந்து வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் எரிசக்தி இறக்குமதியை மேற்கொண்டு வரும் நிலையில், பிப்ரவரி 24 முதல் மே 26 வரை ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் மொத்த பொருட்கள் இறக்குமதியை 6.4 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 1.99 பில்லியன் டாலராக இருந்தது.
எவ்வாறாயினும், ரஷ்யாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதிகள், கிட்டத்தட்ட 50 சதவீதம் சரிந்து 377.07 மில்லியன் டாலர்களாக உள்ளது. ஏன்னென்றால், ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்தியா பண பரிமாற்றம் செய்வதில் சிரமத்தை சந்தித்து வருகிறது. அமெரிக்க டாலர் போல் ரஷ்யாவும் ஒரு பண முறையை கொண்டு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிசக்தியை தொடர்ந்து கொள்முதல் செய்து வரும் நிலையில், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நிலையை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.
அந்த இறக்குமதிகள் நாட்டின் ஒட்டுமொத்தத் தேவைகளில் ஒரு பகுதியை மட்டுமே செய்ததாகவும், “மலிவான” ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்குவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விமர்சனம் செய்த நாடுகளுக்கு பதில் கொடுத்தது. மேலும், இதை திடீரென நிறுத்தினால் அதன் நுகர்வோருக்கு செலவுகள் அதிகரிக்கும் என்றும் வாதிட்டு இருந்தது.
இதற்கிடையில், இந்திய எரிசக்தி நிறுவனங்கள் கால விநியோக ஒப்பந்தங்கள் மற்றும் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களில் சாத்தியமான பங்குகளை கையகப்படுத்துவது குறித்து விவாதித்து வருகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil