சர்வதேச தரத்தில் தயாராகும் திருப்பதி ரயில் நிலையம்: அமைச்சர் அறிவிப்பு

நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் திருப்பதியை நோக்கி பக்தர்கள் தினம் தோறும் படையெடுத்து வருகின்றனர். அதிலும் வார இறுதி நாட்கள், இதர விடுமுறை நாள்கள் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கிறது.

பெரும்பாலான பக்தர்கள் திருப்பதி வருவதற்கு ரயில்களை பயன்படுத்தி வரும் நிலையில் ரூ.350 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில் திருப்பதி ரயில் நிலையத்தை அமைக்க உள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நிலையில், முந்தைய திட்டங்களை மாற்றி புதிய திட்டத்தை முன்வைக்கப்பட்டுள்ள்ளது.

அதிமுகவை அழிக்க பாஜக திட்டம்: விழித்துக் கொள்வாரா எடப்பாடி?

தெற்குப் பகுதியில் உள்ள ரயில் நிலைய கட்டிடத்தின் மேம்பாடு அடித்தளம் மற்றும் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் மேற்கொள்ளப்பட உள்ளது.

வடக்குப் பகுதியில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்படும். மேலும், ரயில் நிலைய கட்டிடத்தின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியை இணைக்கும் வகையில் 35 மீட்டர் அகலத்தில் இரண்டு பாதைகள் அமைக்கப்படும்.

தெற்கு பிளாக்கில் உள்ள அடித்தளத்தில் 500 கார்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். தரைத்தளத்தில், வடக்கு மற்றும் தெற்குத் தொகுதிகளின் தரைத்தளத்தில் புறப்படும் இடம், வருகைக் கூடம், டிக்கெட் கவுண்டர் மற்றும் காத்திருப்பு அறை ஆகியவை கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 23 லிப்ட், 20 எஸ்கலேட்டர், 150க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிரா, காத்திருப்பு அறைகள், உணவகங்கள், ஓய்வு அறைகள், பூங்கா, வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய ரயில் நிலைய மாதிரிப் புகைப்படத்தை வெளியிட்டார் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.