ஜூன் மாதத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு உயர்வுடன் துவங்கினாலும், ஆசிய சந்தையின் மந்தமான வர்த்தகச் சூழ்நிலை காரணமாகச் சென்செக்ஸ் சரிவு பாதைக்குத் தள்ளப்பட்டது. இதனால் ரீடைல் முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதேபோல் கச்சா எண்ணெய் விலை 122.84 டாலர் வரையில் உயர்ந்துள்ள நிலையில் மீண்டும் உலக நாடுகளில் விலைவாசி, பணவீக்கம் ஆகியவை அதிகரிக்கும் என அச்சம் நிலவுகிறது.
இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 1003.56 கோடி ரூபாய் முதலீட்டை வெளியேற்றிய அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் புதன்கிழமையும் கணிசமான முதலீட்டை வெளியேற்றத் துவங்கியுள்ளனர்.
Jun 1, 2022 3:20 PM
மஹிந்திரா நிறுவனம் மே மாதம் 53,726 வாகனங்களை விற்பனை செய்துள்ளது
Jun 1, 2022 3:19 PM
மே 2021 மொத்த விற்பனை 17,447 வாகனங்கள் மட்டுமே
Jun 1, 2022 12:09 PM
அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்ட சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்வுடன் உள்ளது
Jun 1, 2022 12:09 PM
சென்செக்ஸ் குறியீடு 149.21 புள்ளிகள் உயர்ந்து 55,715.62 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 1, 2022 12:09 PM
நிஃப்டி குறியீடு 27.25 புள்ளிகள் உயர்ந்து 16,611.80 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 1, 2022 12:09 PM
ஐசிஐசிஐ வங்கி அனைத்து கடனுக்கான வட்டி விகிதத்தை 0.30% உயர்த்தியது
Jun 1, 2022 12:09 PM
பாட்டா நிறுவனத்தின் பிளாக் டீல் எதிரொலியாக இந்நிறுவனப் பங்குகள் 3 சதவீதம் வரையில் சரிவு
Jun 1, 2022 12:08 PM
eMudhra பங்குகள் 6 சதவீத ப்ரீமியம் விலையில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது
Jun 1, 2022 12:08 PM
பஜாஜ் ஆட்டோ விற்பனை 2021 மே மாதத்தை ஒப்பிடுகையில் வெறும் 1 சதவீத வளர்ச்சியில் 2.75 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது
Jun 1, 2022 12:08 PM
சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரையில் உயர்ந்து சரிந்தது
Jun 1, 2022 12:08 PM
2022 இறுதிக்குள் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை 2.75 சதவீதமாக உயர்த்தும் – ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு ஸ்டீவன் இங்கிலான்டர்
Jun 1, 2022 12:06 PM
இன்போசிஸ் : டிமாண்ட் அதிகமாக உள்ளது 13-15 சதவீத வருவாய் வளர்ச்சிக்கு எவ்விதமான சிக்கலும் இல்லை
Jun 1, 2022 12:06 PM
அசோக் லேலண்ட் மே மாத விற்பனை 315% உயர்வு
Jun 1, 2022 12:05 PM
அசோக் லேலண்ட் கடந்த ஆண்டு வெறும் 3199 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ள நிலையில் 2022 மே மாதத்தில் 13273 வாகனங்களை விற்பனை செய்துள்ளது
Jun 1, 2022 12:05 PM
அதானி பங்குகள் ஏப்ரல் மாத உச்சத்தில் இருந்து தொடர் சரிவு
Jun 1, 2022 12:05 PM
அதானி குழும பங்குகள் ஜூன் மாத முதல் வர்த்தக நாளில் பெரும்பாலான பங்குகள் சரிவில் துவங்கியுள்ளது
Jun 1, 2022 12:04 PM
பாரத் டைனாமிக்ஸ் பங்குகள் 7 சதவீதம் வரையில் உயர்வு
Jun 1, 2022 12:04 PM
பாரத் டைனாமிக்ஸ் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து 2,971 கோடி ரூபாய் திட்டத்தைக் கைப்பற்றியுள்ளது
Jun 1, 2022 12:04 PM
அதானி பவர் பங்குகள் 5 சதவீதம் வரையில் சரிவு
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
sensex nifty live updated 01 june 2022: gdp data auto sales emudhra ipo listing covid brent crude bitcoin gold rate
sensex nifty live updated 01 june 2022: gdp data auto sales emudhra ipo listing covid brent crude bitcoin gold rate தடுமாறும் பங்குச்சந்தை.. ஜூன் மாதத்தில் முதல் நாளே இப்படியா..?