கொல்கத்தா: பிரபல பாடகர் கே.கே.வின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. கொல்கத்தா ரபீந்திர சதன் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கே.கே.வின் உடலுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் மரியாதை செலுத்தினார். நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு பிறகு கிருஷ்ணகுமார் காலமானார். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடியவர் கிருஷ்ணகுமார். இவரின் மரணம் இயற்கைக்கு மாறானது என வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.