இந்தோனேஷியா: ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்தோனேஷியாவில் நடைபெற்ற போட்டியில் ஜப்பான் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது.