7 முறை துப்பாக்கியால் சுட்ட பிறகும் மீண்டு யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்ற அதிகாரி

உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்த மாகாண சிவில் சர்வீஸ் அதிகாரி ரின்கூ சிங் ரஹீ. மாநில சமூக நலத்துறையில் அதிகாரியாக உள்ள ரின்கூ சிங், கடந்த 2008-ம் ஆண்டு முசாபர்நகரில் ஸ்காலர்ஷிப்பில் நடந்த 83 கோடி மோசடியை முறியடிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்.

இந்த வழக்கில் 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு 4 பேருக்கு 10 ஆண்டுகளை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த மோசடி வெளியான உடனேயே, ரின்கூ தாக்கப்பட்டு ஏழு முறை சுடப்பட்டார். இதில் துப்பாக்கி குண்டு முகத்தில் பாய்ந்தது.  இந்த தாக்குதலில் அவரது முகம் சிதைந்து ரின்கூ சிங் தனது பார்வை மற்றும் செவிப்புலனை இழந்தார்.

இதற்கிடையே, ரன்கூ சிங் அரசு நடத்தும் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் இயக்குனராக அவர் பல ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் ஆர்வலர்களுக்கு கற்பித்தும் வருகிறார்.

இந்நிலையில், சக மாணவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க ரன்கூ 2021-ம் ஆண்டு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதுகுறித்து ரின்கூ சிங் ரஹீ கூறியதாவது:-

எனது மாணவர்கள் தன்னிடம் யுபிஎஸ்சி தேர்வை எழுதச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அவர்களின் தூண்டுதலால்தான் நான் தேர்வு எழுதினேன்.

இதற்கு முன் 2004ம் ஆண்டில் நான் மாகாண சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றேன்.

என்னைப் பொறுத்தவரை பொது நலன் முக்கியம். சுயநலத்திற்கும் பொது நலனுக்கும் இடையே எப்போதாவது மோதல் ஏற்பட்டால் நான் பொது நலனைத்தான் தேர்ந்தெடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. திருப்பதியில் கடந்த 4 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.