Actress Shakeela Daughter Milla Amman Getup Viral Photoshoot : நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிலா அம்மன் கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
80-90-களில் தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. தமிழ் சினிமாவில் சப்போர்ட்டிங் கேரக்டரில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய ஷகிலா அதன்பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக கவர்ச்சிப்படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த காலத்தில், மலையாள சினிமாவில் இரு துருவங்களாக மம்முட்டி மோகன்லால் இருவருக்கும் டஃப கொடுக்கும் அளவுக்கு படங்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
தற்போது கவர்ச்சிக்கு குட்பை சொல்லிவிட்ட ஷகிலா காமெடி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்க தொடங்கியுள்ளார். இவரின் காமெடி காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் தனது கவர்ச்சி இமேஜை நீக்கிவிட்டு அம்மா என்று சொல்லும் அளவுக்கு மாற்றியுள்ளார்.
தற்போதுவரை திருமணம் செய்துகொள்ளாத ஷகிலா, மிளா என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தற்போது வளர்ந்து பெரியவராகிவிட்ட மிளா ஆடை வடிவமைப்பாளராக இருந்து வரும் நிலையில், அவ்வப்போது சீரியலிலும் தலைகாட்சி வருகிறார். சிறுவயதில் ஹிஷாம் என்ற ஆணாக இருந்த மிளா தனது 9 வயதில் தனக்குள் இருந்த பெண்மையை உணர்ந்து பெண்ணாக மாறியதை தொடர்ந்து அவரை ஷகிலா தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
ஷகிலாவும் மிளாவும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து வரும் நிலையில், அவ்வப்போது இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆணாக இருந்து பெண்ணாக மாறிய மிளா தற்போது தன்னைப்போன்று இருக்கும் பலருக்கும் முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 5-ல் நமீதா மாரிமுத்துவுக்கு முன்பு பங்கேற்க இருந்தது மிளாதான்.
ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் பங்கேற்காத நிலையில், அவருக்கு பதிலான நமீதா மாரிமுத்து பங்கேற்றார். திருநங்கைகள் சார்பாக நமீதா மாரிமுத்து பிக்பாஸ் சென்றது பெருமையாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சமூகலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மிளா யூடியூப் சேனலிகளில் பேட்டி மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் மிளா தற்போது அம்மன் வேடத்தில் மேக்கப் செய்து புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பிணியாக இருப்பது போன்று போட்டோஷூட் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவந்த நிலையில், தற்போது கர்ப்பணியில் இருந்து அம்மனாக அவதாரம் எடுத்துள்ளார் என்று பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“