33 வயதில் திருமணத்தை அறிவித்த பிரபல தமிழ் நடிகை


நடிகை பூர்ணா திருமணம் செய்துகொள்ள உள்ளதாக வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூர்ணா.

இவர் கந்தக்கோட்டை, தகராறு, கொடிவீரன், காப்பான் போன்ற தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

ஷாம்னா காசிம் என்ற தனது இயற்பெயரை சினிமாவுக்காக பூர்ணா என்று மாற்றிக்கொண்டார். இந்த நிலையில் 33 வயதாகும் பூர்ணா தற்போது திருமணம் செய்துகொள்வதை உறுதி செய்துள்ளார்.

33 வயதில் திருமணத்தை அறிவித்த பிரபல தமிழ் நடிகை

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அத்துடன், குடும்பத்தினரின் ஆசிர்வாதங்களுடன் என் வாழ்க்கையின் அடுத்த பகுதியில் அடியெடுத்து வைக்கிறேன். இப்போது அது அதிகாரப்பூர்வமாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.      





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.